நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய சுனில் கவாஸ்கர்
பைல் படம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ப்ஷிப் இறுதிபோட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இறுதிப்போட்டி ஜீன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போடியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்வர். முதல் தடவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட இந்திய அணி இந்த முறை அந்த கோப்பையை எப்படியாவது கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் அந்த நம்பிக்கையுடன் இந்திய அணி உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கினார். அதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிபோட்டிக்கு முன்னர் முழு உடற்தகுதியை எட்டுவதில் சந்தேகம் நிலவுகிறது.
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் செயல்பட்டார். 4 போட்டிகளிலும் அவரே விக்கெட் கீப்பராக செயல்பட்டார். பேட்டிங்கில் ஓரளவு நம்பிக்கை அளித்த பரத் விக்கெட் கீப்பிங்கில் கடுமையான சொதப்பியதன் மூலம் விமர்சனத்துகு உள்ளாகி உள்ளார்.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இந்த வீரர் தான் ஆட வேண்டும் என இந்திய முன்னள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுலை பார்க்கலாம். ஓவல் மைதானத்தில் ராகுல் 5 அல்லது 6வது வரிசையில் பேட்டிங் செய்தால் நமது பேட்டிங் மிகவும் வலிமையாக இருக்கும். ஏனெனில், அவர் கடந்த காலங்களில் இங்கிலாந்தில் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்து உள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆடும் லெவனை தேர்வு செய்யும் போது கே.எல்.ராகுலை மனிதில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக வெற்றியை கொண்டாடும் வகையில் மைதானத்தில் நுழைந்த சுனில் கவாஸ்கரும், மேத்யூ ஹைடனும் ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu