/* */

கடைசி நேரத்தில் டுவிஸ்ட் கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்! ஐபிஎல்லுக்கு வருகிறாராம்...!

உலகின் மிகப் பிரம்மாண்டமான கிரிக்கெட் தொடரான ஐபிஎல் இம்முறை இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது. இந்த சீசனில் தனது பெயரையே பதிவு செய்யாத ஸ்டீவ் ஸ்மித் இப்போது கலந்துகொள்ள இருக்கிறாராம்!

HIGHLIGHTS

கடைசி நேரத்தில் டுவிஸ்ட் கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்! ஐபிஎல்லுக்கு வருகிறாராம்...!
X

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், ஒரு சூப்பர் டிவிஸ்ட்டையும் வைத்திருக்கிறார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு தனது பெயரை பதிவு செய்யாத ஆஸி கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்மித், இப்போது ஐபிஎல்லுக்கு வருவதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு இவரை ஏலத்தில் எந்த அணியும் எடுக்காத நிலையில் அவர் கடுப்பாகிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் அதிருப்தியடைந்தது என்னவோ ரசிகர்கள்தான். ஸ்மித்துக்கு இந்தியாவில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் இம்முறை விளையாட மாட்டார் என்பதை அறிந்த அவர்கள் வருத்தத்தில் இருந்து வந்த நிலையில், வெளியாகியிருந்தது ஸ்மித்தின் வீடியோ.

உலகின் மிகப் பிரம்மாண்டமான கிரிக்கெட் தொடரான ஐபிஎல் இம்முறை இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது. இந்த சீசனில் தனது பெயரையே பதிவு செய்யாத ஸ்டீவ் ஸ்மித் இப்போது கலந்துகொள்ள இருப்பதாக கூறியிருப்பதால் அவர் நிச்சயமாக விளையாடுவதைப் பற்றி பேசவில்லை என்பதை ரசிகர்கள் உணர்ந்துகொண்டனர். ஆனால் இவர் என்ன அர்த்தத்தில் தான் ஐபிஎல்லில் கலந்து கொள்ள இருப்பதை கூறினார் என மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இவர் வர்ணனையாளராக தொடரப்போகிறார் என்கிற த கவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் இதுபோல் ஒருமுறை வர்ணனையாளராக பணியாற்றியிருந்தார். பின் அவரின் ஆட்டத்திறனை அதிகரித்துக்கொண்டு மீண்டும் களமிறங்கினார். அதுபோல ஸ்டீவ் ஸ்மித் அடுத்த ஆண்டு மீண்டும் விளையாடுவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி வெள்ளிக்கிழமை துவங்க இருக்கிறது. முதல் ஆட்டத்தில் ஹர்டிக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் தோனி வழிநடத்தும் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட இருக்கிறது.

Updated On: 31 March 2023 6:31 AM GMT

Related News