தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்.. அவுட் ஆகி வெளியேறிய கில்!

தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்.. அவுட் ஆகி வெளியேறிய கில்!
X
ஜடேஜா வீசிய பந்தினை மின்னல் வேகத்தில் பிடித்து ஸ்டெம்பில் அடித்து சுப்மன் கில்லை அவுட் ஆக்கி வெளியேற்றினார் கேப்டன் தோனி.

ஜடேஜா வீசிய பந்தினை மின்னல் வேகத்தில் பிடித்து ஸ்டெம்பில் அடித்து சுப்மன் கில்லை அவுட் ஆக்கி வெளியேற்றினார் கேப்டன் தோனி.

துஷார் தேஷ்பாண்டே வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் லட்டு கேட்ச் கொடுத்தார் சுப்மன் கில். அது லாவகமாக தீபக் சாஹர் கையில் போய் விழ, அவர் அதனை பிடித்துவிடுவார் என்று நினைக்கையில் தவறவிட்டுவிட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஒருவேளை அப்போதே பிடித்திருந்தால் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுப்மன் கில் விக்கெட் போயிருக்கும். ஆனால் அதற்கு பிரதிபலனாக, பவுண்டரிகளையும் சிக்ஸரையும் பரிசாக பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதல் ஓவரில் மொத்தம் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குஜராத் அணி. அதில் கில், சஹா இருவரும் தலா 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.

இரண்டாவது ஓவரிலும் தலா இரண்டு ரன்கள் என அணியின் மொத்த ஸ்கோர் 8 ரன்களையே எட்டியிருந்தது.

கேட்ச் தவறிவிட்ட பிறகு தீபக் சாஹர் வீசிய பந்துகளை 6, 0, 4, 4, 2, 0 என விரட்டினர்.

அடுத்து துஷார் தேஷ்பாண்டே ஓவரில் 4,4,4,1,1,0 என பறக்கவிட்டனர்.

5வது ஓவரில் 11 ரன்கள் எடுத்தனர். 6வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து சுப்மன் கில் அதிரடியைத் துவங்கினார்.

பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி விக்கெட்டுகளை இழக்காமல் 62 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 17 பந்துகளில் 36 ரன்களும், விரிதிமான் சஹா 19 பந்துகளில் 26 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்நிலையில், 7வது ஓவரை ஜடேஜா வீசினார். ஜடேஜா வீசிய பந்தினை மின்னல் வேகத்தில் பிடித்து ஸ்டெம்பில் அடித்து சுப்மன் கில்லை அவுட் ஆக்கி வெளியேற்றினார் கேப்டன் தோனி. அந்த நேரம் பார்த்து சுப்மன் கில்லின் கால் ஒரு நொடி வெளியில் சென்று பின் திரும்பியது. இந்த கனநேரத்தில் கண்ணிமைக்கும் நொடியில் ஸ்டெம்பிங் செய்து தான் யார் என்பதை நிரூபித்துள்ளார் கேப்டன் தோனி.

Tags

Next Story