டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா ஆதிக்கம்

டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா ஆதிக்கம்
X

மணிஷ் நார்வால், சிங்ராஜ் 

பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இன்று இந்தியாவின் மணிஷ் நார்வால் தங்கம் வென்றார், சிங்ராஜ் வெள்ளிப்பதக்கம்

பாரா துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மணிஷ் நார்வால் தங்கமும், சிங்ராஜ் வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இப்போது 15-ஆக உயர்ந்துள்ளது.

இந்த போட்டியில், 218.2 புள்ளிகளுடன் மணிஷ் முதல் இடத்திலும், 216.7 புள்ளிகளுடன் சிங்ராஜ் இரண்டாம் இடத்திலும் நிறைவு செய்தனர். ஏற்கனவே, ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இந்தியாவின் அவானி லெகாராவைத் தொடர்ந்து, ஒரே பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார் சிங்ராஜ். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களில் மணிஷ் நார்வாலுக்கு வயது 19, சிங்ராஜூக்கு வயது 39.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!