ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: தொகுப்பாளர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: தொகுப்பாளர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
X

மயங்கி விழுந்த ஹக் எட்மீட்ஸ்.

பெங்களூரில் நடைபெற்றுவரும் ஐபிஎல் ஏலத்தில் திடீரென தொகுப்பாளர் மயக்கி விழுந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 -ன் மெகா ஏலம் பெங்களூரில் தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் ஏலம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஏலத்தை நடத்தும் ஹக் எட்மீட்ஸ் மயங்கி கீழே சரிந்து விழுந்தார்.

இதனைக்கண்ட ஏலம் எடுக்க வந்த அனைத்து அணியினரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தற்போது ஹக் எட்மீட்ஸ் நன்றாக உள்ளதாகவும், எங்கள் மருத்துவக் குழு அவரை பரிசோதித்து வருகிறது. மீண்டும் மாலை 3.30 மணி முதல் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Tags

Next Story
டெய்லியும் நீங்க வெவ்வேற டைம்ல தூங்குனா என்ன ஆகும் தெரியுமா..?