டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்த செரீனா வில்லியம்ஸ்

'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டத்தில் ,23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.
இந்த தோல்வியுடன் அவர் தனது 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார்.அமெரிக்க ஓபனுடன் ஓய்வு பெறுவதாக செரீனா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை என்று செரீனா வில்லியம்ஸ் வெள்ளிக்கிழமை கூறினார்.
23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர் மற்றும் நியூயார்க்கில் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்றவர், தனது மூன்றாவது சுற்று மோதலில் 7-5, 6-7 (4/7), 6-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu