அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதமடித்த 21 வயது சாய் சுதர்ஷன்! யார் இவர்?
மிச்சல் மார்ஷ், அன்ரிச் நோர்ஜே ஆகியோரின் பந்து வீச்சை சிதறடித்து தனது விக்கெட்டை இழக்காமலே இந்த சீசனில் அவரது முதல் மேட்சை முடித்தார். இவர் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது மிகப்பெரிய ஆளாக வருவார் என்று ஹர்திக் பாண்டியா பாராட்டினார். யார் இந்த சாய் சுதர்ஷன்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார் சாய் சுதர்ஷன் . கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் 38 பந்துகளைச் சந்தித்தவர் 53 ரன்கள் எடுத்து சுனில் நரேன் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். குஜராத் அணிக்காக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இந்த தமிழக வீரர்.
21 வயதே ஆன இந்த வீரருக்குள் இருக்கும் திறமையை சரியாக கண்டறிந்து தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறது குஜராத் அணி.
சென்னையைச் சேர்ந்த 19 வயது இடது கை பேட்ஸ்மன் சாய் சுதர்ஷன். தமிழ்நாடு பிரீமியர் லீக் 2021 மூலம் உலகத்துக்கு தெரிய வந்தவர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இவர் எடுக்கப்பட்டிருந்தாலும் பெஞ்ச்லேயே உக்கார வைக்கப்பட்டிருந்தார். லைகா கோவை கிங்ஸ் சார்பில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 87 ரன்கள் எடுத்திருந்தார். 43 பந்துகளைச் சந்தித்து சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி பந்து வீச்சாளர்களை களைப்படையச் செய்தார். 8 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் இதில் அடங்கும்.
இவரின் இந்த செயலை இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டிவிட்டர் மூலம் உலகறியச் செய்தார். இவரைப் பற்றி பலருக்கும் தனது வீடியோ வழியாக கூறினார். தமிழ் நாடு கிரிக்கெட் அசோசியேசனுக்கு இவரை தமிழக அணியில் எடுக்க வலியுறுத்தினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இவர் த நடராஜன், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் விளையாடினார். தற்போது ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu