இரண்டாவது டெஸ்ட் போட்டி: சிராஜ் மிரட்டலில் 55 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா

இரண்டாவது டெஸ்ட் போட்டி: சிராஜ் மிரட்டலில் 55 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா
X

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை அள்ளிய சிராஜ் 

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் வெறும் 9 ஓவர்கள் மட்டுமே வீசிய சிராஜ் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளரான முகமது சிராஜ் வரிசையாக வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களான மார்க்ரம், எல்கர், டோனி டி ஜோர்ஜி, டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரைன் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த இன்னிங்சில் வெறும் 9 ஓவர்கள் மட்டுமே வீசிய சிராஜ் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

வெறும் 23.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 6 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் 20 ரன்களை கூட தொடவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 15 ரன்கள் அடித்தார்.

1வது டெஸ்டில் மோசமான தோல்விக்கு பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான மீண்டு வந்தது. பந்தில் இந்தியாவின் பயங்கர முயற்சியால் தென்னாப்பிரிக்கா இந்தியாவுக்கு எதிராக இதுவரை இல்லாத குறைந்த டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது,

தென்னாப்பிரிக்காவில் சிறந்த பந்து வீசிய இந்திய பௌலர்கள் வரிசையில் சிராஜ் 3வது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக 2022இல் ஷர்துல் தாக்குர் 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதுதான் தென்னாப்பிரிக்காவின் மோசமான சாதனையாகும். இதற்கு முன்பாக இலங்கை அணியிடம் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய டெஸ்ட் போட்டியில், செஞ்சூரியனில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது, அங்கு இந்திய பந்துவீச்சு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்திய அணி பந்துவீச்சில் இரண்டு மாற்றங்களைச் செய்தது. அந்த அணி ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர் ஆகியோரை நீக்கி ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமாரை அணியில் சேர்த்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சில் ஈடுபட்டதால் முதல் இன்னிங்ஸில் எந்த இந்திய சுழற்பந்து வீச்சாளரும் பந்து வீசவில்லை

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!