தெறிக்கவிட்ட ருதுராஜ், கான்வே ஜோடி: ஐதராபாத் அணியை விழ்த்தி சிஎஸ்கே 3வது வெற்றி

தெறிக்கவிட்ட ருதுராஜ், கான்வே ஜோடி: ஐதராபாத் அணியை விழ்த்தி சிஎஸ்கே 3வது வெற்றி
X
ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் அணி பந்துவீச்சாளர்கள் திணறினர்.

பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 182 என இருந்தபோது பிரிந்தது. ருதுராஜ் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கான்வே ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் விளாசினார். டோனி 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

சன்ரைசர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் மற்றும் வில்லியம்சன் பார்ட்னர்ஷிப் அருமையான தொடக்கமாக இருந்தாலும், அபிஷேக் 39 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த திரிபாதி டக் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த மார்க்ரம் 17 ரன்னில் வெளியேற, கேப்டன் மற்றும் பூரான் ஆட்டம் அதிரடியாக அமைந்தது. ஆனால் இது நிலைக்கவில்லை. வில்லியம்சன் 47 ரன்னில் அவுட் ஆக, அடுத்து வந்த வீரர்கள் உடனே வெளியேறினர். ஆனால் மறுபக்கம் இருந்த பூரான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் 6 புள்ளிகளை பெற்ற சென்னை, கொல்கத்தா அணியின் புள்ளிகளுடன் சமநிலையை பெற்றுள்ளது.

Tags

Next Story
தினம் 1 கேரட்..!  பச்சையாக சாப்பிட்டால் உங்க முகம் பளபளவென மாறிடும் தெரியுமா...? | Carrot benefits in tamil