போராடி வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

RR vs MI Head to Head
X

RR vs MI Head to Head

RR vs MI Head to Head-19.3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 214 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

RR vs MI Head to Head-ஐபிஎல் தொடர்களின் 1000வது போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஞாயிறு டபுள்ஸின் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோத இருக்கிறது.

ஐபிஎல் தொடரின் 2023 சீசன் கடந்த மாதம் துவங்கி நடந்து வருகிறது. ஒரு மாத காலமாக நடந்து வரும் இந்த போட்டியில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ, சென்னை உள்ளிட்ட அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. குஜராத் அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும் மற்ற 3 அணிகளும் 5 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

இந்த சீசனின் 42 வது போட்டி இன்று நடைபெற இருக்கும் மும்பை அணிக்கு எதிராக ராஜஸ்தான் மோதும் போட்டி. இது ஒட்டுமொத்த ஐபிஎல் தொடர்களின் 1000 வது போட்டியாகும். இதுவரை நடந்த போட்டிகளின் எண்ணிக்கை 999 ஆகும். சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு வென்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இதற்கு அடுத்தபடியாக 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்டது ராஜஸ்தான் அணி. இதுதான் ஐபிஎல் தொடர்களின் ஆயிரமாவது போட்டியாக அமைந்தது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. யாஷஸ்வி மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்க விட்டார். மறுபுறும் ஜோஸ் பட்லர் 18 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். சஞ்சு சாம்சன் 14 ரன்களும், படிக்கல் 2 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

ஷிம்ரன் ஹெட்மயரும் 8 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். துருவ் ஜூயல் அடுத்து 2 ரன்களில் அவுட் ஆக ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ரன்கள் எடுத்திருந்தார். இப்படி ஒரு பக்கம் 7 விக்கெட்டுகளை இழந்தாலும் துவக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் வெறித்தன ஆட்டம் ஆடி, 124 ரன்கள் எடுத்திருந்தார். 62 பந்துகளில் 8 சிக்ஸர்களும் 16 பவுண்டரிகளையும் அடித்திருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. அடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கியது மும்பை அணி.

ரோஹித் சர்மா 3 ரன்களில் அவுட் ஆனாலும், இஷான் கிஷன் நிலைத்து நின்று ஆடி 28 ரன்கள் எடுத்தார். அடுத்து கேமரூன் க்ரீன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் தன் பங்குக்கு 29 பந்துகளில் 55 ரன்களை எடுத்தார். 4 விக்கெட்டுகளை இழந்து 19 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் எடுத்திருந்தனர்.

திலக் வர்மா, டிம் டேவிட் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் டிம் டேவிட். இரண்டாவது பந்தையும் சிக்ஸருக்கு விரட்டியதால் மும்பை ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கினார் டிம் டேவிட். அடுத்து 3 வது பந்தையும் சிக்ஸருக்கு விரட்டி மும்பை அணியை வெற்றிக்கு வழிநடத்திக் கூட்டிச் சென்றார்.

19.3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 214 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

இதுவரை நடந்த போட்டிகளில் மும்பைக்கும் ராஜஸ்தானுக்கும் நேருக்கு நேர் என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கலாம்.

ஐபிஎல் 2023 மும்பை

இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பெற்றிருக்கிறது மும்பை அணி. தனது 4 வது வெற்றியைப் பெற மும்முரமாக தயாராகி வருகிறது அந்த அணி.

ஐபிஎல் 2023 ராஜஸ்தான்

8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 5 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பெற்றிருக்கிறது. அடுத்து இன்றைய போட்டியிலும் வென்று தனது நிலையை புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறது ராஜஸ்தான் அணி.

ருத்ரதாண்டவமாடத் தயாராகும் பட்லர்

இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் தனது ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோஸ் பட்லர், மும்பைக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் மும்பை பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இம்முறை அர்ஜூன் டெண்டுல்கர், மெரிடித், பியூஷ் சாவ்லா, பெரண்டாஃப் உள்ளிட்டோரின் தாக்குதலை எப்படி எதிர்கொண்டு தனது ஃபார்மைத் தொடர இருக்கிறார் பட்லர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாஃர்மில்லாமல் தவிக்கும் SKY

சூர்ய குமார் யாதவ் மும்பை அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மென். ஆனால் இந்த சீசனில் அவருக்கு டச் இல்லாததால் ஃபார்ம் அவுட் ஆகி தவிக்கிறார். பெரிய அளவில் எந்த மேட்சும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இந்த ஆட்டத்தில் எப்படி விளையாடப் போகிறார் என எதிர்பார்த்து வருகின்றனர்.

வெறிகொண்ட ராஜஸ்தான் வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெய்ஸ்வால், பட்லர், சாம்சன், ஹெட்மயர், படிக்கல், துருவ் என வரிசையாக அனைவரும் வெளுத்து வாங்குகிறார்கள். பவுலிங்கில் சாஹல், அஸ்வின், போல்ட், சந்தீப் சர்மா, ஹோல்டர் என மிரட்டி வருகிறார்கள்.

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளிலும், மும்பை அணி 14 போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ளன.

சர்ப்ரைஸ் கொண்டாட்டம்

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். அதன்படி பிசிசிஐ ஒரு மொமண்டோ கொடுக்க திட்டமிட்டுள்ளதாம். மேலும் மூன்று கொடிகளையும் பிடித்து வீரர்கள் மைதானத்துக்குள் நுழைவார்கள் என்று கூறப்படுகிறது. அதில் ஐபிஎல் கொடி, நன்றி பதாகை, இந்திய தேசிய மூவர்ண கொடி ஆகியவை அடங்கும். கடைசியாக மொமண்ட்டோ ரோஹித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் கையில் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story