RR Vs LSG 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது லக்னோ அணி!

RR Vs LSG 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது லக்னோ அணி!
X
அப்போது ஜூரெல் களமிறங்கினார். வந்த முதல் பந்திலேயே கேட்ச் தூக்கி கொடுத்து அவுட் ஆக்கினர். இதனால் இந்த இன்னிங்ஸ் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியால் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்வதாக முடிவெடுத்தது. இதனையடுத்து லக்னோ அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் கொஞ்ச நேரம் நிலைத்து நின்று ஆடினர். நிதானமாகவும் தேவையான நேரங்களில் அடித்தும் ஆடிய இவர்கள் லக்னோ அணிக்கு ரன்களைக் குவித்தனர். ஓரிரு கேட்ச்கள் மிஸ் செய்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது.

10 ஓவர்கள் தாக்குபிடித்து ஆடிய நிலையில் 11வது ஓவரின் 4 வது பந்தில் அவுட் ஆகி வெளியேறினார் கேப்டன் கே எல் ராகுல். அப்போது அணியின் ஸ்கோர் 84 ரன்கள். அந்த ஓவரை வீசியவர் ஜேசன் ஹோல்டர். கேட்ச் பிடித்தவர் ஜோஸ் பட்லர்.

ராகுலைத் தொடர்ந்து ஆயுஷ் பதோனி களமிறங்கினார். அடுத்த ஓவரிலேயே அவுட் ஆகி வெளியேறினார். அவருக்கு பிறகு தீபக் ஹூடா களமிறங்கினார். அவரும் பெரிய ஸ்கோர் எதுவும் அடிக்காமலேயே பெவிலியன் திரும்ப 13.2 ஓவர்களுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்ததாக மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் களமிறங்கினார். மறுபுறம் கைல் மேயர்ஸ் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் அவர்.

ஸ்டொய்னிஸுடன் ஜோடி சேர்ந்தார் நிக்கோலஸ் பூரான். இந்நிலையில் மீண்டும் ஒரு விக்கெட்டை இழந்தது லக்னோ அணி. 16 பந்துகளில் 21 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார் ஸ்டொய்னிஸ். அதே ஓவரில் பூரான், யுத்வீர் சிங் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். குருணால் பாண்டியா மட்டும் களத்தில் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், போல்ட், சந்தீப், ஹோல்டர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த அணியின் துவக்க வீரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறிது சிறிதாக ரன் சேர்த்தனர். இடையிடையே சிக்ஸர்கள், பவுண்டரிகளையும் பறக்கவிட்டனர். 11 ஓவர்கள் வரை விக்கெட்டை விடாதவர்கள் 12 வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தனர். ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை 44 ரன்கள் அடித்திருந்தபோது இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

ஹெட்மயர் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேற ஜோஸ் பட்லரும் 40 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

கடை ஓவரில் தேவ்தத் படிக்கல், ரியான் பராக் ஆகியோர் களத்தில் இருந்தனர். 6 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க வேண்டியதாக இருந்தது.

கடைசி ஓவரை ஆவேஷ் கான் வீசினார். முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார் ரியான் பராக். 2வது பந்தில் 1 ரன் எடுக்க, 4 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு. 3வது பந்தில் தேவ்தத் படிக்கல் அவுட் ஆக, கடைசி 3 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது.

அப்போது ஜூரெல் களமிறங்கினார். வந்த முதல் பந்திலேயே கேட்ச் தூக்கி கொடுத்து அவுட் ஆக்கினர். இதனால் இந்த இன்னிங்ஸ் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியால் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

Tags

Next Story