வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்
X
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா உள்பட 3 வீரர்கள் விலகல். இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி தொடரை வென்றது. இதன் பின்னர் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர் . மிர்பூரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்யும் போது ரோஹித்தின் இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.

ரோகித் சர்மா விலகியதால் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 'ஏ' அணிக்காக இரண்டு ஆட்டங்களில் 299 ரன்கள் எடுத்த பிறகு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷமி மற்றும் ஜடேஜாவுக்கு பதிலாக இந்திய அணியில் நவ்தீப் சைனி மற்றும் சவுரப் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுளள்ளனர் .மேலும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டை தேர்வு செய்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் நவ்தீப் சைனி மற்றும் சவுரப் குமார் ஆகியோரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் சௌராஷ்டிரா அணியுடன் உள்நாட்டு சுற்று ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பிறகு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டார்.

"வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தோள்பட்டை மற்றும் முழங்கால் காயங்களில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை, மேலும் அவர்கள் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளனர். தேர்வாளர்கள் முறையே ஷமி மற்றும் ஜடேஜாவிற்கு பதிலாக நவ்தீப் சைனி மற்றும் சவுரப் குமார் ஆகியோரை நியமித்துள்ளனர். டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டை தேர்வுக் குழு சேர்த்துள்ளது" என்று பிசிசிஐ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேச டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி : கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மான் கில், செட்டேஷ்வர் புஜாரா (வி.கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக். கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக். கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil