கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரோகித் சர்மா உருக்கமாக நன்றி

கிரிக்கெட் விளையாட்டில் 15 ஆண்டுகளை இன்றுடன் நிறைவு செய்த ரோகித் சர்மா.
விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இவருக்கு வயது 34. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 15 ஆண்டுகளை ரோகித்சர்மா இன்று நிறைவு செய்துள்ளார்.
கடந்த 2007 ம் ஆண்டில் இதே நாளில்தான் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக ரோகித் சர்மா அறிமுகமானார்.
கிரிக்கெட் விளையாட்டில் 15 ஆண்டுகள் நிறைவு செய்த ரோகித் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது :நான் இந்தியாவுக்காக அறிமுகமாகி இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறேன். நிச்சயமாக இந்த பயணத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. மேலும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நான் சொல்லி கொள்வது எல்லாம், உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் எங்களுக்கு சவால்களை சமாளிக்க உறுதுணையாக உள்ளது. இவ்வாறு ரோகித்சர்மா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu