வார்ம்-அப் போட்டியின் கடைசி ஓவரை முகமது ஷமி ஏன் வீசினார்?: ரோஹித் சர்மா விளக்கம்

வார்ம்-அப் போட்டியின் கடைசி ஓவரை முகமது ஷமி ஏன் வீசினார்?: ரோஹித் சர்மா விளக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின் இறுதி ஓவரை வீசிய முகமது ஷமி 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டி20 உலகக் கோப்பை 2022 க்கு ஜஸ்பிரித் பும்ராவிற்கு மாற்றாக ஆஸ்திரேலியாவை அடைந்த சில நாட்களுக்குப் பிறகு , திங்களன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முகமது ஷமி வியக்கத்தக்க பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர், இந்த போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசினார், அதுவும் கடைசி ஓவராக இருந்தது.

ஆனால் அந்த 6 பந்துகளில் அவர் செய்தது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இன்னும் சொல்லப்போனால், பந்து வீசச் சொல்லப்பட்ட சிக்கலான சூழ்நிலையையும் மீறி பந்து வீசிய ஷமியின் ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா கூட ஆட்டமிழந்தார்.

பயிற்சி ஆட்டத்தில் வியக்கத்தக்க வகையில் போட்டியின் பெரும்பகுதியில் ஷமியை பந்துவீச்சு தாக்குதலில் இருந்து ரோஹித் விலக்கி வைத்தார். இருப்பினும், 20-வது ஓவரில் ஷமி பந்துவீச்சில் ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டீம் இந்தியாவின் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஒரு பந்து கூட வீசவில்லை. ஆனால், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி ஓவரில் 10 ரன்ககள் தேவைப்பட்ட நிலையில் ஷமிக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஷமி முதல் இரண்டு பந்துகளில் 4 ரன்கள் கொடுத்து பேட் கம்மின்ஸை விராட் கோலியின் அற்புதமான ஒற்றைக் கை கேட்ச் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் ஆஷ்டன் அகர் ரன்-அவுட் ஆகா ஆஸ்திரேலிய அணி 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஷமி அடுத்த இரண்டு பந்துகளிலும் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இதனால், ஆஸ்திரேலியா 180 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித், ஷமிக்கு ஒரு ஓவரை மட்டும் ஏன் கொடுத்தேன், அதுவும் கடைசி ஓவரில் என்பதைரோஹித் விளக்கினார்.

"அவர் (ஷமி) நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறார், அதனால் நாங்கள் அவருக்கு ஒரு ஓவர் கொடுக்க விரும்பினோம். அவருக்கு ஒரு சவாலை கொடுக்க விரும்பினோம், இறுதி ஓவரை வீச அனுமதித்தோம், அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள்," என்று அவர் கூறினார்.

பும்ரா இல்லாத பட்சத்தில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சுக்கு தலைமை தாங்கும் பெரிய பொறுப்பு ஷமிக்கு இருக்கும். பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் பந்துவீசிய விதத்தைக் கருத்தில் கொண்டால், அவர் மீதான அணி நிர்வாகத்தின் நம்பிக்கை நிச்சயமாக ஊக்கம் பெற்றிகுக்கும்.

Tags

Next Story