சிக்ஸ் அடித்த இரண்டு உலக சாதனைகளை முறியடித்த ரோஹித் ஷர்மா

சிக்ஸ் அடித்த இரண்டு  உலக சாதனைகளை முறியடித்த ரோஹித் ஷர்மா
X
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ரோஹித் சர்மா இரண்டு பெரிய உலக சாதனைகளை படைத்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டியின் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை மிகவும் எளிதாக எதிர்கொண்டு முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதில் கில் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 61 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டத்தில் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 60 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஏபி டி வில்லியர்ஸ் 58 சிக்சர்கள் அடித்ததே முந்தைய உலக சாதனையாகும். தற்போது ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ODI சிக்ஸர்கள்

  • 60* - 2023ல் ரோஹித் சர்மா*
  • 58 - 2015 இல் ஏபி டி வில்லியர்ஸ்
  • 56 - 2019 இல் கிறிஸ் கெய்ல்
  • 48 – 2020ல் ஷாஹித் அப்ரிடி

மேலும் நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா இதுவரை 24 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன் என்ற இங்கிலாந்தின் இயன் மோர்கன் சாதனையை உடைத்துள்ள ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் கேப்டனாக இயன் மோர்கன் 22 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். தற்போது அதனை தகர்த்து 'ஹிட்மேன்' புதிய சாதனை படைத்துள்ளார்.

ஒரே ஒரு உலகக்கோப்பையில் கேப்டன் அடித்த அதிக சிக்ஸர்கள்

  • 24* - 2023ல் ரோஹித் சர்மா*
  • 22 - 2019 இல் இயோன் மோர்கன்
  • 21 - 2015 இல் ஏபி டி வில்லியர்ஸ்
  • 18 - 2019 இல் ஆரோன் பிஞ்ச்
  • 17 – 2015ல் பி மெக்கல்லம்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil