KKR ரிங்கு சிங்கின் சம்பளம் இவ்வளவுதானா?
சிலிண்டர் போடுபவரின் மகன், ஆட்டோ ஓட்டுபவரின் தம்பி, துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்த ரிங்கு சிங் இப்படி ஒரே நாள் இரவில் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாராக மாறுவார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்படி ஒரு மேட்சில் அனைவரது பல்ஸையும் எகிற வைத்த ரிங்கு சிங் வாங்கும் சம்பளம் எவ்வளது தெரியுமா? கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் அவருக்கு அந்த அணி கொடுக்கும் சம்பளம் குறித்து தெரிந்து கொள்வோம்.
கடைசி 8 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தால் எப்பேர்பட்ட பேட்ஸ்மன் களத்தில் இருந்தாலும் நாம் நிச்சயமாக நம்பிக்கை இழந்திருப்போம். கடைசி பால் வரை நின்று பார்க்க அங்கு களத்தில் நிற்பது தோனி இல்லையே எனும் மனநிலை இருந்தது. சரி என்னதான் செய்கிறார் என்று பார்க்கலாம் என்று நினைக்கையில், ரிங்கு சிங்கின் பேட்டிலிருந்து பலத்த அடி வாங்கி பந்து ஒன்று எல்லைக் கோட்டுக்கு அருகே சென்று விழ, அங்கே பார்த்துக் கொண்டிருந்த கொல்கத்தா ரசிகர்கள் மத்தியில் ஒரு சின்ன புன்னகை.
ரிங்குவின் அதிரடியில் 5 சிக்ஸர்கள்
கடைசி ஓவரில் 6 பால் 5 சிக்ஸர் தேவை எனும்போது அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்தவர் உமேஷ் யாதவ். சரியாக சிங்கிள் எடுத்து ரிங்கு சிங்குக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்க அடுத்தடுத்த 5 பந்துகளில் நிகழ்ந்தது முற்றிலுமாக அதிசயம்தான்.
உலகமே கொண்டாடும் ரிங்கு சிங் வறுமையின் பிடியில் வாழ்ந்து வரும் 9 பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா சிலிண்டர் போடும் வேலை செய்பவர். அண்ணன் ஆட்டோ ஓட்டுநர். ரிங்கு சிங் குப்பை அள்ளும் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் பயிற்சி செய்ய பயணம் செய்தவர். இவர்களின் குடும்ப வருமானம் மாதம் 10 ஆயிரம் வந்தாலே மிகப் பெரிய விசயம். அப்படி வறுமையிலிருந்து ஆடி வந்த ரிங்குவுக்கு ஆரம்ப காலங்களில் நம்பிக்கை அளித்து உதவி செய்தவர் நம்ம சின்ன தல ரெய்னா.
உத்திரப்பிரதேச அணியின் கேப்டனாக இருந்தவர் ரெய்னா. அவரின் தலைமையின் கீழ் முதன் முதலில் அந்த அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ரிங்கு சிங். பயிற்சி செய்வதற்கே கிளவுஸ், பேட் வாங்க காசு இல்லை. அணி நிர்வாகத்தின் உதவியுடன்தான் அங்கு பயிற்சி செய்துதான் தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார் ரிங்கு.
ரெய்னா செய்த உதவி
இதனை அறிந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா, ரிங்குவுக்கு பேட், கிளவுஸ் வாங்கி கொடுத்து சில அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். ஏனோ தானோ வென்று ஆடாமல் தொழில்ரீதியிலான ஆட்டத்தை நுணுக்கமாக ஆட சொல்லியிருக்கிறார். பின்னர் இவரது திறமையை அறிந்து அணியில் வாய்ப்பு வழங்கி, மிடில் ஆர்டரில் விளையாட செய்திருக்கிறார்.
உத்தரப்பிரதேச அணியில் இவருக்கு நிறைய வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் சரியாக விளையாடாமல் இருந்தாலும் அவரிடம் பேசி அவருக்கு ஆதரவாக இருந்திருக்கிறார் ரெய்னா. இதுமட்டுமின்றி இவருக்கு பொருளாதார ரீதியில் பல உதவிகளையும் ரெய்னா செய்திருக்கிறார்.
ரெய்னாவின் உதவியால் உத்திரப்பிரசேத அணியில் ஆடி ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்தார். கொல்கத்தா அணி இவரை 2018ம் ஆண்டு 85 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால் 2022ல் மீண்டும் நடைபெற்ற ஏலத்தில் இவருக்கு 55 லட்சம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu