தேசிய விளையாட்டு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 29-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஹாக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரரான மேஜர் தியான் சந்த் என அறியப்படும் தியான் சிங்கின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு அவர் பெரும் பங்காற்றினார்.
விளையாட்டின்போது, பந்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் வகையிலும், கடத்தி செல்வதிலும் மற்றும் கோல் அடிக்கும் திறமையாலும் வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவர் அறியப்படுகிறார். 1979-ம் ஆண்டு தியான் சந்த் மறைந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், டெல்லி தேசிய ஸ்டேடியம் பின்னர் மேஜர் தியான் சந்த் ஸ்டேடியம் என பெயர் மாற்றியமைக்கப்பட்டது
ஹாக்கி விளையாட்டில், ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இந்தியா 3 தங்க பதக்கங்களை வெல்ல உதவிய தியான் சந்த்தை கௌரவிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தேசிய விளையாட்டு தினம் மற்றும் மேஜர் தியான் சந்த் பிறந்த நாளை முன்னிட்டு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விளையாட்டுக்கு சமீபத்திய ஆண்டுகள் மிகசிறந்த ஒன்றாக உள்ளன. இந்த நிலை தொடர வேண்டும். நாடு முழுவதும் விளையாட்டு பிரபலம் அடைய வேண்டும் என உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu