RCB Vs LSG IPL 2023 லக்னோ அணி த்ரில் வெற்றி
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கைத் துவங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி போராடி வென்றது.
RCB Vs LSG IPL 2023
ஐபிஎல் 2023 தொடரின் 15 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு வருகிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. லக்னோ அணி டாஸ் வென்றது.
அதிரடி காட்டிய விராட் கோலி
துவக்கம் முதலே அதிரடியைக் கையிலெடுத்தார் விராட் கோலி. மறுபுறம் பாஃப் டூப்ளஸிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், ஆவேஷ் கான் வீசிய 2 வது ஓவரில் 13 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓரை குருனால் பாண்டியா வீசினார். அவரது ஓவரில் டூப்ளஸிஸ் ஒரு பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோர் 25 ரன்களைக் கடந்தது.
3 ஓவர்களுக்கு 25 ரன்கள் எடுத்திருந்த பெங்களூரு அணி, 5 ஓவர்கள் முடிவில் 42 ரன்களை எட்டியது. மார்க் வுட் வீசிய 6வது ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, அடுத்த பந்தை சிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்திருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
வரும் பந்துகளை அடிக்கடி பவுண்டரி, சிக்ஸருக்கு விரட்டிக் கொண்டிருந்த விராட் கோலி, மிக எளிதாக தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். லக்னோ அணிக்கு எதிராக இது அவரின் முதல் அரைசதமாகும். தொடர்ந்து ஆடிய அவரின் அதிரடியைப் பொறுக்க முடியாத எதிரணி கேப்டன், சுழல் வீரர் அமித் மிஸ்ராவை அழைத்து வந்தார்.
அமித் மிஸ்ராவின் சுழல் மாயத்தில் சிக்கி தூக்கி விட்ட விராட் கோலி ஸ்டொய்னிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் களமிறங்கினார்.
வேற லெவலுக்கு இறங்கி அடித்த டூப்ளஸிஸ் அடுத்ததாக அரைசதத்தை கடந்தார். லக்னோ அணி பந்து வீச்சாளர்களை பரபரக்க வைத்து பந்துகளை சிதறடித்தார். எல்லைக் கோட்டுக்கு வெளியேயும் பல பந்துகளை பறக்கவிட்டார். அதில் ஒரு பந்து மைதானத்தைத் தாண்டி வெளியே சென்று விழுந்தது. 115 மீட்டர்கள் தூரத்துக்கு சென்று விழுந்தது அந்த பந்து.
அரைசதம் அடித்த டூப்ளசிஸ் ஒருபுறம் அடித்து ஆட, மறுபுறம் மேக்ஸ்வெல் வெறித்தனமாக ஆடி ரன்களைக் குவித்தார். அவரும் அதிரடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவுட் ஆகும் நிலையில் 29 பந்துகளைச் சந்தித்து 59 ரன்கள் எடுத்திருந்தார்.
கடைசி பந்தை எதிர்கொண்டார் தினேஷ் கார்த்திக். டூப்ளஸிஸ் 46 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.
213 வெற்றி இலக்கு
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. அந்த அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கைல் மேயர்ஸ் முதல் ஓவரிலேயே அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு வீரரான கே எல் ராகுல் அதிக நேரம் நிலைத்து நின்றாலும் ரன் எதுவும் அடிக்கவில்லை.
தீபக் ஹூடா, குருனால் பாண்டியா என அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறியதால் லக்னோ அணி கொஞ்சம் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.
லக்னோ அணியின் மானத்தைக் காப்பாற்றியே தீருவேன் என களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் தனது பேட்டால் பதிலளித்தார். அதிரடி ஷாட்களை தேர்ந்தெடுத்து அடித்து பெங்களூர் அணி பவுலர்களை மிரள வைத்தார். 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரும் அவுட் ஆகி வெளியேறினார்.
ஆட்டத்தை மாற்றிய பூரன்
இவர் அவுட் ஆனதும் கே எல் ராகுலும் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் உயிர் இல்லை இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு சாதகமான ஆட்டமாக முடிவடையும் என பலரும் நினைத்தார்கள். ஆனால் நிக்கோலஸ் பூரன் அதனை மாற்றினார். தனது அதிரடி ஆட்டத்தால் 19 பந்துகளிலேயே 62 ரன்களை குவித்தார்.
லக்னோ அணி நிச்சயமாக வெற்றி பெறும் என நினைத்திருந்த சமயத்தில் சிராஜ் பந்து வீச்சில் சாபாஷ் அகமது கையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுபுறம் பதோனி தனியாக நின்று கொண்டிருந்தார். அவருக்கு துணையாக ஜெயதேவ் உனத்கட் களமிறங்கினார்.
17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் பதோனி, ஜெயதேவ் ஆகியோர் நின்றனர்.
அப்போது ஹர்சல் படேல் வீசிய இரண்டாவது பந்தில் உனத்கட் ஒரு எட்ஜ் மூலம் 4 ரன்களை எடுத்தார்.
மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை பதோனியிடம் ஒப்படைத்தார். நான்காவது பந்தில் மீண்டும் ஒரு சிங்கிள். 5வது பந்தில் இன்னுமொரு சிங்கிள். கடைசி பந்திலும் சிங்கிள் எடுக்க அந்த ஓவரில் மொத்தம் 9 ரன்கள் வந்தன.
வெற்றிக்கான ரன்கள்
கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலைக்கு வந்தது ஆட்டம். 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் பதோனி. ஆனால் சிக்சர் அடித்ததும் அதே வேகத்தில் பேட்டைக் கொண்டு ஸ்டம்பை உரசவே, ஹிட் விக்கெட் ஆகி அவுட் ஆனார். அதன் பின்னர் மார்க் வுட் களமிறங்கினார்.
கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பந்து வீசிய ஹர்சல் படேல் கிளீன் போல்டு எடுத்தார். மார்க் வுட் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பிறகு உள்ளே வந்த ரவி பிஸ்னாய் அவர் சந்தித்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பாலில் ஒரு ரன் எடுத்து ஸ்கோர் சமன் செய்தார் உனத்கட். ஆனால் அடுத்த பந்தில் அவுட் ஆனார். கடைசி பந்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றியை பதிவு செய்தது.
RCB Vs LSG IPL 2023 Players List
Royal Challengers Bangalore Playing XI: Virat Kohli, Faf du Plessis (c), Mahipal Lomror, Glenn Maxwell, Shahbaz Ahmed, Dinesh Karthik (wk), Anuj Rawat, David Willey, Wayne Parnell, Harshal Patel, Mohammed Siraj.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல் (கேட்ச்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (வி.கே.), ஜெய்தேவ் உனத்கட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னோய்
Lucknow Super Giants Playing XI: KL Rahul (c), Kyle Mayers, Deepak Hooda, Marcus Stoinis, Krunal Pandya, Nicholas Pooran (wk), Jaydev Unadkat, Amit Mishra, Avesh Khan, Mark Wood, Ravi Bishnoi.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ப்ளேயிங் லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேட்ச்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (வி.கே.), அனுஜ் ராவத், டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu