RCB Vs LSG IPL 2023 டூப்ளஸிஸ், மேக்ஸ்வெல் அதிரடியால் 212 ரன்களைக் கடந்த பெங்களூர் அணி! சேஸ் செய்யுமா லக்னோ அணி?

RCB Vs LSG IPL 2023 டூப்ளஸிஸ், மேக்ஸ்வெல் அதிரடியால் 212 ரன்களைக் கடந்த பெங்களூர் அணி! சேஸ் செய்யுமா லக்னோ அணி?
X
கடைசி பந்தை எதிர்கொண்டார் தினேஷ் கார்த்திக். டூப்ளஸிஸ் 46 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கைத் துவங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.

RCB Vs LSG IPL 2023

ஐபிஎல் 2023 தொடரின் 15 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு வருகிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. லக்னோ அணி டாஸ் வென்றது.

நேருக்கு நேர்

இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதியிருந்தாலும் லக்னோ அணி இதுவரை பெங்களூரு அணியை வென்றது கிடையாது. அதுமட்டுமின்றி இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிரடி காட்டிய விராட் கோலி

துவக்கம் முதலே அதிரடியைக் கையிலெடுத்தார் விராட் கோலி. மறுபுறம் பாஃப் டூப்ளஸிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், ஆவேஷ் கான் வீசிய 2 வது ஓவரில் 13 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓரை குருனால் பாண்டியா வீசினார். அவரது ஓவரில் டூப்ளஸிஸ் ஒரு பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோர் 25 ரன்களைக் கடந்தது.

3 ஓவர்களுக்கு 25 ரன்கள் எடுத்திருந்த பெங்களூரு அணி, 5 ஓவர்கள் முடிவில் 42 ரன்களை எட்டியது. மார்க் வுட் வீசிய 6வது ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, அடுத்த பந்தை சிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்திருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

வரும் பந்துகளை அடிக்கடி பவுண்டரி, சிக்ஸருக்கு விரட்டிக் கொண்டிருந்த விராட் கோலி, மிக எளிதாக தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். லக்னோ அணிக்கு எதிராக இது அவரின் முதல் அரைசதமாகும். தொடர்ந்து ஆடிய அவரின் அதிரடியைப் பொறுக்க முடியாத எதிரணி கேப்டன், சுழல் வீரர் அமித் மிஸ்ராவை அழைத்து வந்தார்.

அமித் மிஸ்ராவின் சுழல் மாயத்தில் சிக்கி தூக்கி விட்ட விராட் கோலி ஸ்டொய்னிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் களமிறங்கினார்.

வேற லெவலுக்கு இறங்கி அடித்த டூப்ளஸிஸ் அடுத்ததாக அரைசதத்தை கடந்தார். லக்னோ அணி பந்து வீச்சாளர்களை பரபரக்க வைத்து பந்துகளை சிதறடித்தார். எல்லைக் கோட்டுக்கு வெளியேயும் பல பந்துகளை பறக்கவிட்டார். அதில் ஒரு பந்து மைதானத்தைத் தாண்டி வெளியே சென்று விழுந்தது. 115 மீட்டர்கள் தூரத்துக்கு சென்று விழுந்தது அந்த பந்து.

அரைசதம் அடித்த டூப்ளசிஸ் ஒருபுறம் அடித்து ஆட, மறுபுறம் மேக்ஸ்வெல் வெறித்தனமாக ஆடி ரன்களைக் குவித்தார். அவரும் அதிரடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவுட் ஆகும் நிலையில் 29 பந்துகளைச் சந்தித்து 59 ரன்கள் எடுத்திருந்தார்.

கடைசி பந்தை எதிர்கொண்டார் தினேஷ் கார்த்திக். டூப்ளஸிஸ் 46 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.

RCB Vs LSG IPL 2023 Players List

Royal Challengers Bangalore Playing XI: Virat Kohli, Faf du Plessis (c), Mahipal Lomror, Glenn Maxwell, Shahbaz Ahmed, Dinesh Karthik (wk), Anuj Rawat, David Willey, Wayne Parnell, Harshal Patel, Mohammed Siraj.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல் (கேட்ச்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (வி.கே.), ஜெய்தேவ் உனத்கட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னோய்

Lucknow Super Giants Playing XI: KL Rahul (c), Kyle Mayers, Deepak Hooda, Marcus Stoinis, Krunal Pandya, Nicholas Pooran (wk), Jaydev Unadkat, Amit Mishra, Avesh Khan, Mark Wood, Ravi Bishnoi.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ப்ளேயிங் லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேட்ச்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (வி.கே.), அனுஜ் ராவத், டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil