RCB vs DC IPL 2023 வென்றது பெங்களூரு! 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு. அதிரடி ஆட்டத்தை துவங்கியது பெங்களூர் அணி. துவக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியுடன் களமிறங்கினார் கேப்டன் பாஃப் டூப்ளஸிஸ்.
முதல் ஓவரை ஆண்ட்ரூ நோர்க்யா வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட கோலி இரண்டு பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது ஓவரை வீசிய அக்ஸார் படேல் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கோலி 3 ரன்களும், டூப்ளஸிஸ் 2 ரன்களும் எடுத்தனர்.
மூன்றாவது ஓவரை வீசிய முஸ்தபிசர் ரஹ்மான் 2 பவுண்டரிகளுடன் மொத்தம் 10 ரன்களை விட்டுக் கொடுத்தார் . இம்முறை பாஃப் டூப்ளஸிஸ் 2 பவுண்டரிகளையும் அடித்திருந்தார்.
மீண்டும் அக்ஸார் படேல் ஓவரில் ஒரு சிக்ஸருடன் 7 ரன்கள் எடுத்தார் பாஃப் டூப்ளஸிஸ்.
5வது ஓவரில் டூப்ளஸிஸ் அவுட் ஆனார். மிட்சல் மார்ஸ் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தை விராட் கோலியும், 3வது பந்தை பாஃப் டூப்ளஸிஸும் பவுண்டரிக்கு விரட்டினர். 4வது பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார் பாஃப்.
பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் வெறும் நான்கு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் லலித் யாதவ். பவர் ப்ளே முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது பெங்களூரு அணி.
பாஃப் டூப்ளஸிஸைத் தொடர்ந்து உள்ளே வந்தார் மஹிபால் லம்ரோர். விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து 10 ஓவர்களை ஆடினார். இந்நிலையில் விராட் கோலி அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்த பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
க்ளென் மேக்ஸ்வெல் அடுத்தாக களமிறங்கி மஹிபாலுடன் ஜோடி சேர்ந்தார். 18 பந்துகளில் 26 ரன்களைக் குவித்திருந்த அவர் மிட்செல்மார்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹர்சல் படேலும் 6 ரன்களோடு நடையைக் கட்டினார்.
ஷபாஸ் அகமது உள்ளே வந்தார். அவர் மேக்ஸ்வெல்லுக்கு பக்கபலமாக நின்று விளையாடினார். 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல்லும் அவுட் ஆகி வெளியேற அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகி கிளம்பினார். கடைசியில் ஷபாஸுடன் அனுஜ் ராவத் கைக் கொடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு பெங்களூரு அணி 174 ரன்களை எடுத்திருந்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
துவக்க ஆட்டக்காரர்களாக வந்த டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடி தருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஏமாற்றத்தை தந்திருக்கிறார்கள். வந்த வேகத்திலேயே பிரித்வி ஷாவும் அவரைத் தொடர்ந்து வந்த மிட்சல் மார்ஸும், அவருக்கு பிறகு வந்த யாஷ் துல்லும் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி அணி.
டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டே கொஞ்ச நேரம் நிலைத்து நின்று ஆடினார். அதேநேரம் மறுபுறம் ஆடிக் கொண்டிருந்த வார்னர் 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு மணிஷ் ஜோடியாக களமிறங்கினார் அபிஷேக் போரெல். ஆனால் அவராலும் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை.
வழக்கம்போல டெல்லி அணிக்கு அக்ஸார் படேலின் உதவி தேவைப்பட, அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு ஆடி 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரது விக்கெட்டையும் வைசாக் பறித்துக் கொண்டார்.
அமான் ஹக்கிம் 10 பந்துகளில் 18 ரன்களும், ஆன்ரிச் நோர்க்யா 14 பந்துகளில் 23 ரன்களும் எடுத்தனர். ஆனால் அடிக்க வேண்டிய ரன்கள் மிக அதிகமானதாக இருந்ததால் 20 ஓவர்களில் அவர்களால் இலக்கை எட்ட முடியவில்லை.
20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu