RCB vs DC IPL 2023 முதல் வெற்றியைப் பெறுமா டெல்லி? 175 ரன்கள் இலக்கு!

RCB vs DC IPL 2023 முதல் வெற்றியைப் பெறுமா டெல்லி? 175 ரன்கள் இலக்கு!
X
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு பெங்களூரு அணி 174 ரன்களை எடுத்திருந்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு. அதிரடி ஆட்டத்தை துவங்கியது பெங்களூர் அணி. துவக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியுடன் களமிறங்கினார் கேப்டன் பாஃப் டூப்ளஸிஸ்.

முதல் ஓவரை ஆண்ட்ரூ நோர்க்யா வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட கோலி இரண்டு பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்தார்.

இரண்டாவது ஓவரை வீசிய அக்ஸார் படேல் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கோலி 3 ரன்களும், டூப்ளஸிஸ் 2 ரன்களும் எடுத்தனர்.

மூன்றாவது ஓவரை வீசிய முஸ்தபிசர் ரஹ்மான் 2 பவுண்டரிகளுடன் மொத்தம் 10 ரன்களை விட்டுக் கொடுத்தார் . இம்முறை பாஃப் டூப்ளஸிஸ் 2 பவுண்டரிகளையும் அடித்திருந்தார்.

மீண்டும் அக்ஸார் படேல் ஓவரில் ஒரு சிக்ஸருடன் 7 ரன்கள் எடுத்தார் பாஃப் டூப்ளஸிஸ்.

5வது ஓவரில் டூப்ளஸிஸ் அவுட் ஆனார். மிட்சல் மார்ஸ் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தை விராட் கோலியும், 3வது பந்தை பாஃப் டூப்ளஸிஸும் பவுண்டரிக்கு விரட்டினர். 4வது பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார் பாஃப்.

பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் வெறும் நான்கு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் லலித் யாதவ். பவர் ப்ளே முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது பெங்களூரு அணி.

பாஃப் டூப்ளஸிஸைத் தொடர்ந்து உள்ளே வந்தார் மஹிபால் லம்ரோர். விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து 10 ஓவர்களை ஆடினார். இந்நிலையில் விராட் கோலி அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்த பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.

க்ளென் மேக்ஸ்வெல் அடுத்தாக களமிறங்கி மஹிபாலுடன் ஜோடி சேர்ந்தார். 18 பந்துகளில் 26 ரன்களைக் குவித்திருந்த அவர் மிட்செல்மார்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹர்சல் படேலும் 6 ரன்களோடு நடையைக் கட்டினார்.

ஷபாஸ் அகமது உள்ளே வந்தார். அவர் மேக்ஸ்வெல்லுக்கு பக்கபலமாக நின்று விளையாடினார். 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல்லும் அவுட் ஆகி வெளியேற அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகி கிளம்பினார். கடைசியில் ஷபாஸுடன் அனுஜ் ராவத் கைக் கொடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு பெங்களூரு அணி 174 ரன்களை எடுத்திருந்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

நேருக்கு நேர் Head to Head

மொத்த மோதல்கள் - 27 ஆட்டங்கள்

பெங்களூரு அணி வென்றது - 16 ஆட்டங்கள்

டெல்லி அணி வென்றது - 10 ஆட்டங்கள்

முடிவில்லாதது - 1 ஆட்டம்

குறைந்தபட்சம் ஸ்கோர் | RCB lowest score in ipl vs DC | DC lowest score in ipl vs RCB

பெங்களூரு அணி - 137 ரன்கள்

டெல்லி அணி - 95 ரன்கள்

ஆடும் வீரர்கள் rcb vs dc playing 11

Royal Challengers Bangalore: Virat Kohli, Faf du Plessis (c), Mahipal Lomror, Glenn Maxwell, Shahbaz Ahmed, Dinesh Karthik (wk), Wanindu Hasaranga, Harshal Patel, Wayne Parnell, Mohammed Siraj, Vijaykumar Vyshak.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேட்ச்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (வி.கே), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னெல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

Delhi Capitals: David Warner (c), Mitchell Marsh, Yash Dhull, Manish Pandey, Axar Patel, Aman Hakim Khan, Lalit Yadav, Abishek Porel (wk), Kuldeep Yadav, Anrich Nortje, Mustafizur Rahman

டெல்லி தலைநகரங்கள்: டேவிட் வார்னர் (கேட்ச்), மிட்செல் மார்ஷ், யாஷ் துல், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கீம் கான், லலித் யாதவ், அபிஷேக் போரல் (வி.கே), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்

Tags

Next Story