RCB vs CSK IPL 2023 ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தியது சென்னை
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. துவக்க ஆட்டக் காரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட்டும் டெவான் கான்வேயும் களமிறங்கினார்கள்.
முகமது சிராஜ் பந்து வீச்சில் இரண்டாவது ஓவரில் அவுட் ஆனார் ருத்து. 6 பந்துகளைச் சந்தித்திருந்தவர் 3 ரன்களோடு நடையைக் கட்டினார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மறுபுறம் டெவான் கான்வே நிற்க அவருக்கு ஜோடியாக அஜிங்யா ரஹானே களமிறங்கினார்.
இருவரும் பெங்களூர் அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். பர்னெல், வைசாக், மேக்ஸ்வெல் ஹசரங்கா என அனைவரது ஓவரையும் அடித்து வெளுத்தவர்கள் அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொண்டே சென்றனர்.
20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த ரஹானே, ஹசரங்காவின் 2வது ஓவரில் அவுட் ஆனார். இது எதிர்பாராத அவுட்டாக அமைந்தது. இதனால் ரசிகர்கள் வருத்தப்படும்படி ஆகிவிட்டது. இந்நிலையில் 32 பந்துகளில் டெவான் கான்வே அரைசதம் அடித்தார்.
ரஹானே வெளியேற்றத்தைத் தொடர்ந்து வந்த ஷிவம் துபே, பெங்களூரு அணி பந்து வீச்சை வெளுத்து வாங்க ரன் வேகமெடுத்தது. துபேவும், டெவன் கான்வேவும் எல்லா திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டனர்.
பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்து கொண்டிருந்த அந்த வேளையில் அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்துகொண்டிருந்தது. 170 ரன்களைக் கடந்த நிலையில், 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்த கான்வே அவுட் ஆனார்.
அவருக்கு பிறகு அம்பத்தி ராயுடு களமிறங்கி அவர் பங்குக்கு 1 சிக்ஸ், 1 போஃர் அடித்து 6 பந்துகளில் 14 ரன்களுடன் வெளியேறினார். ஷிவம் துபே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிலையில் 27 பந்துகளில் 52 ரன்களுக்கு அவுட் ஆனார்.
மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆட்டத்தில் இருந்தனர். கடைசி ஓவரை ஹர்சல் பட்டேல் வீசனார். அந்த ஓவரை மிகச் சிறப்பாக வீசிய ஹர்சல், இரண்டு நோ பால்களை வீசியிருந்தார். இதனால் அவரை மாற்றிவிட்டு வேறு பவுலரை பந்து வீச பணித்தார் நடுவர்.
மேக்ஸ்வெல் ஃப்ரீ ஹிட் போட அதை ஜடேஜா சிக்ஸராக்கினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 226 ரன்கள் எடுத்திருந்தது.
227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூப்ளஸிஸ் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினார். ஆனால் துரதிஷ்ட வசமாக கோலி 6 ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த லாம்பர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அவருக்கு பிறகு களமிறங்கிய மேக்ஸ்வெல், பாப் டூப்ளஸிஸுடன் ஜோடி சேர்ந்து வெளுத்து வாங்கினார்.
36 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் 8 சிக்ஸர்களை அடித்து விளாசினார். தீக்ஷனா பந்து வீச்சில் அவர் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இதனால் சென்னை ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் மறுபுறும் டூப்ளஸிஸ் அவரது வழக்கமான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
அவருக்கு ஜோடியாக ஷபாஸ் அகமது களமிறங்கினார். சற்று திணறியபடி பேட்டிங் செய்த அவர், மொயின் அலி ஓவரில் ஒரு சிக்ஸரையும் விளாசினார். அடுத்து சிங்கிள் கொடுத்து டூப்ளஸிஸிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார்.
அதே ஓவரில் டூப்ளஸிஸ் தலைக்கு மேல் அடிக்க அது மிக உயர பறந்து தோனியின் கைகளில் அகப்பட்டுக் கொண்டது. இதனால் மீண்டும் சென்னை அணியின் கை ஓங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் தினேஷ் கார்த்திக் அடுத்து களமிறங்கி அவர் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாச பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
கடைசி 4 ஓவர்களுக்கு 46 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை பெங்களூருக்கு ஏற்பட்டுள்ளது. 9 பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்து ஷபாஸ் அகமதுவும், 9 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக்கும் களத்தில் இருக்கின்றனர். மீண்டும் கேட்ச் ஒன்றை விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அடுத்த பந்திலேயே தினேஷ் கார்த்திக் அடித்த பந்தை தீக்ஷனா பிடித்து சென்னை அணி ரசிகர்களின் மனதில் பால் வார்த்தார்.
கடைசி மூன்று ஓவர்களுக்கு 35 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில், ஷாபாஸ் அகமது மற்றும் பிரபு தேசாய் களத்தில் நின்றனர். 18 வது ஓவரின் முதல் பந்திலேயே ஷாபாஸ் மேலே தூக்கி அடித்து ருத்துராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து பந்துகள் சூப்பரானதாக இருந்தால் பெரிய ரன்கள் எதுவும் குவிக்க முடியவில்லை.
கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், அந்த ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பர்னல் விக்கெட்டை எடுத்தார். அவருக்கு பிறகு ஹசரங்கா களமிறங்கினார். இதே ஓவரில் பிரபுதேசாய் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்
கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில் பெங்களூரு அணி வெல்லுமா சென்னை வெல்லுமா என ரசிகர்கள் பதைபதைப்பில் இருந்தனர். ஆனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பெங்களூரு அணியால் 218 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu