/* */

கபில்தேவின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா

நாக்பூரில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்டில் கபில்தேவின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.

HIGHLIGHTS

கபில்தேவின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா
X

நாக்பூரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தனது அற்புதமான ஆட்டத்தை தொடர்ந்தார். ஆல்-ரவுண்டர் வெள்ளிக்கிழமை ஒரு அற்புதமான அரை சதத்தை விளாசினார். ஜடேஜா முதல் நாளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸி அணியை சுருட்ட உதவினார். மேலும் பேட்டிங்கில் ஐம்பது ரன்கள் எடுத்தபோது , இந்திய ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை முறியடித்து மிகப்பெரிய சாதனையைப் படைத்தார்.

ஜடேஜா ஒரு டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அரைசதம் அடித்தது இது ஐந்தாவது முறையாகும், கபில் தனது வாழ்க்கையில் நான்கு முறை இந்த சாதனையை செய்துள்ளார்..

விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், ரோஹித் ஷர்மாவின் சதம் மற்றும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் ஆட்டமிழக்காத அரைசதங்களால் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 56 ரன்னுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து 2வது நாள் ஆட்டத்தை ரோகித், அஷ்வின் தொடங்கினர். இதில் அஷ்வின் 23 ரன்னில் அவுட் ஆனார். ஒருபுறம் கேப்டன் ரோகித் நிலைத்து நின்று ஆடினாலும் ஆனால் மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.

புஜாரா 7 ரன், கோலி 12 ரன், சூர்யகுமார் யாதவ் 8 ரன் ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதையடுத்து கேப்டன் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா நிலைத்து ஆடினார். இந்நிலையில் ரோகித் 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து களம் இறங்கிய பரத் 8 ரன்னில் ஆட்டம் இழக்க அடுத்ததாக ஜடேஜாவுடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடி நிதானமாக ஆடி, இருவரும் அரைசதம் அடித்தனர்.

2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 66 ரன், அக்சர் படேல் 52 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி இதுவரை 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக ஆட்டக்காரர் மர்பி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

Updated On: 11 Feb 2023 4:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு