சொல்லி சிக்ஸர் அடித்த ஜாஸ் பட்லர் சிக்ஸர் மழை பொழிந்த ராஜஸ்தான் அணி

சொல்லி சிக்ஸர் அடித்த ஜாஸ் பட்லர் சிக்ஸர் மழை பொழிந்த ராஜஸ்தான் அணி
X
ஐபிஎல் 15ஆவது சீசனின் 30வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 15ஆவது சீசனின் 30ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி சிக்ஸர் மழை பொழிந்தது.

தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் இந்த போட்டியிலும் சொல்லி சொல்லி சிக்ஸர் அடித்தார். மொத்தமாக 61 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 103 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான தேவ்தத் பட்டிக்கல் 18 பந்துகளில் 24 ரன்களை சேர்த்தார்.

இதன் பின்னர் வந்த சில வீரர்கள் ஏமாற்றிய போதும் கேப்டன் சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று ஆடினார். அவர் 38 ரன்களும், சிம்ரான் ஹெட்மெயர் 26 ரன்களையும் சேர்க்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்களை விளாசியது. பேட்டிங் களம் என்பதால் விரட்டக்கூடிய இலக்காகவே இருந்தது.


218 ரன்களை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்திலேயே சுனில் நரேன் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் பிஞ்ச் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சீரான வேகத்தில் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 29 பந்துகளை சந்தித்த ஃபிஞ்ச் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் வந்த நிதிஷ் ராணா 18 ரன்களுக்கும், ஆண்ட்ரே ரஸல் டக் அவுட்டும் ஆகி ஏமாற்றினர். மறுமுணையில் தூண் போன்று நின்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 85 ரன்கள் விளாசினார். எனினும் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. யுவேந்திர சாஹல் வீசிய ஒரே ஒவரில் 178 /5 என இருந்த ஸ்கோர் 180 -8 என மாறியது.

அவரின் ஓவரில் வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி என அடுத்தடுத்து 4 பேர் அவுட்டாகி வெளியேறினர். இதனால் தோற்றுவிடும் என அனைவரும் எண்ணினர். அப்போது களமிறங்கிய உமேஷ் யாதவ் அடுத்தடுத்து 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார். 9 பந்துகளில் 21ரன்களை அடித்ததால் நம்பிக்கை பிறந்தது. எனினும் அந்த அணி 19.4 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Next Story