RR Vs DC 2023 : ராஜஸ்தானிடம் வீழ்ந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்! முதலிடத்தில் RR!
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வெற்றி
ஐபிஎல் 2023 தொடரின் 11 வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டார்.
ராஜஸ்தான் முதல் பேட்டிங்
ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர்.
கலீல் அகமது முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசினார் ஜெய்ஸ்வால். அடுத்து 5வது. 6வது பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி மொத்தம் இந்த ஓவரிலிருந்து 20 ரன்களைப் பெற்றது ராஜஸ்தான் அணி.
இரண்டாவது ஓவரை நோர்ஜே வீச, இந்த ஓவரின் 3, 5, 6 வது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 12 ரன்களைக் குவித்தார் ஜோஸ் பட்லர். 3வது ஓவரில் முகேஷ் குமார் 7 ரன்களைக் கொடுத்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் மின்னல் வேகத்தில் ரன்களை சேர்த்து வந்தனர். ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் ருத்ரதாண்டவம் ஆட, மறுபுறம் ஜோஸ் பட்லர் தன் பங்குக்கு பந்துகளை விளாசி வந்தார். இதனால் 25 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார் ஜெய்ஸ்வால்.
இந்நிலையில், 9வது ஓவரை வீச முகேஷ் குமார் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 3வது பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஜெய்ஸ்வால். இவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆனது ரசிகர்களுக்கு வருத்தம்தான் என்றாலும் மறுபுறம் ஜோஸ் பட்லர் தனது அதிரடியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். ரியான் பராக் 7 ரன்களில் அவுட் ஆக, அடுத்து ஷிம்ரன் ஹெட்மயர் களமிறங்கினார். தொடர்ந்து தனது அதிரடியைக் காட்டிய பட்லர், ஷிம்ரன் ஹெட்மயருடன் சேர்ந்தும் பந்துகளைப் பறக்க விட்டார். இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.
ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்ததுடன் வேகவேகமாக 79 ரன்கள் சேர்த்து முகேஷ்குமார் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் ஹெட்மயருடன், ஜோரல் ஜோடி சேர்ந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
டெல்லி அணி சார்பில் பந்து வீசிய கலீல் அகமது 2 ஓவர்களுக்கு 31 ரன்களையும் அக்ஷார் படேல் 4 ஓவர்களுக்கு 38 ரன்களையும் வாரி வழங்கியுள்ளனர். முகேஷ் குமார் மட்டும் ஓரளவுக்கு பரவாயில்லாமல் வீசினார். அவருக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து இருநூறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் களமிறங்கியது டெல்லி அணி. டேவிட் வார்னர், லலித் யாதவ் தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன் குவிக்காததால் எளிதில் ராஜஸ்தான் அணி வெற்றியை ருசித்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களே எடுக்க முடிந்ததால், டெல்லி அணி தோல்வியடைந்தது. இதுவரை ௩ போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியைத் தழுவியுள்ளது டெல்லி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu