இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்
X

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

நவம்பர் 17-ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் தொடரில் இருந்து ராகுல் டிராவிட் அணிக்கு பொறுப்பேற்பார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் புதன்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்டார். நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் டிராவிட் அணிக்கு பொறுப்பேற்பார். தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நடந்துகொண்டிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளுடன் நிறைவடைகிறது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஆலோசனைக் குழு ராகுல் டிராவிட்டை டீம் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக நியமித்தது. முன்னாள் இந்திய கேப்டன் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு தொடரில் இருந்து பொறுப்பேற்பார். தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் ரவி சாஸ்திரி மற்றும் மற்ற பயிற்சியாளர் ஊழியர்களின் வெற்றிகரமான பதவிக்காலத்திற்காக, அணி பல உயரங்களை எட்டியதற்காக வாழ்த்தியது.

அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது தனக்கு கிடைத்த "மிகப்பெரிய கௌரவம்" என்று டிராவிட் கூறினார்.

"இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கெளரவம். நான் இந்த பொறுப்பை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். ரவி சாஸ்திரியின் கீழ், அணி சிறப்பாக செயல்பட்டது, மேலும் அணியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். இந்தய கிரிக்கெட் அகாடமி, அண்டர்-19 மற்றும் இந்திய 'ஏ' அணிகளில் பெரும்பாலான இளம் வீரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியதால், ஒவ்வொரு நாளும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் அவர்களுக்கு இருப்பதாக எனக்குத் தெரியும். வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன் " என்று டிராவிட் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

டிராவிட்டின் முன்னாள் சக வீரரும், பிசிசிஐயின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி, புதிய பொறுப்பிற்கு டிராவிட்டை வரவேற்று, நாட்டில் இளம் கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

Tags

Next Story
2 வயசு வரைக்கும் உங்க குழந்தைங்களுக்கு இந்த உணவுகளை மட்டும் குடுக்காதீங்க!!