யுஎஸ் ஓபன் 2022: காயமடைந்தாலும் கலங்காத சிங்கம் நடால்

US Open 2022 -யுஎஸ் ஓபன் 2022 இன் இரண்டாவது சுற்றில் விளையாடும் போது ரஃபேல் நடால் முகத்தில் தன்னைத் தானே அடித்துக் கொண்டார், மேலும் மருத்துவ ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் சிகிச்சை எடுத்துக் கொண்டு இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னினியை தோற்கடித்தார்.
அமெரிக்க ஓபனின் இரண்டாவது சுற்றில் இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னினிக்கு எதிரான ஆட்டத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் காயம் காரணமாக அதிர்ச்சியடைந்தார். ஆட்டத்தின் நான்காவது சுற்றில், நடாலின் ராக்கெட் அவரது முகத்தைத் தாக்கியபோது, மூக்கை பதம் பார்த்தது. லோ பேக்ஹேண்ட் விளையாடும் போது, நடாலின் ராக்கெட் தரையிலிருந்து பட்டு எழும்பி அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது.
காயம் காரணமாக அவர் மருத்துவ ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் சிகிச்சை மேற்கொண்ட பின் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இத்தாலிய வீரருக்கு எதிராக 2-6, 6-4, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் வீரர் தனது கிராண்ட்ஸ்லாம் போட்டியின் வெற்றியை 21-0 என நீட்டித்தார்.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய நடால், கோல்ஃப் கிளப்பில் இதுபோன்ற விஷயங்கள் தன்னுடன் தொடர்ந்து நடந்து வருவதாகவும், ஆனால் அவரது டென்னிஸ் ராக்கெட்டில் இதுவே முதல் முறை என்றும் கிண்டலாக கூறினார்.
நடால் காயத்துடன் விளையாடுவது இது முதல் முறையல்ல. சமீபத்திய காலங்களில், ஃபிரெஞ்ச் ஓபன் 2022 இறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் கால் காயத்துடன் விளையாடி, காஸ்பர் ரூட்டை 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
பின்னர் விம்பிள்டனில் நடால் போட்டியின் காலிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுக்கு எதிராக வயிற்று வலியுடன் விளையாடினார். அவரது சகோதரி மற்றும் பயிற்சியாளர் அவரை ஆட்டத்தை கைவிட்டு வெளியே வருமாறு கோரியும், தொடர்ந்து விளையாடினார். ஆனால் அரையிறுதியில் நிக் கிர்கியோஸிடம் நடால் வாக் ஓவர் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu