ஒலிம்பிக்ஸ் போட்டியில் பிவி சிந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்

ஒலிம்பிக்ஸ் போட்டியில் பிவி சிந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்
X

பிவி சிந்து

இந்தியாவின் பி.வி.சிந்து ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார்

பிவி சிந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். 👏❤️ இன்னும் ஒரு ஆட்டம் ஜெயித்தால் மெடல் உறுதி

இந்தியாவின் பி.வி.சிந்து ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார்

கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா, ஒரேயொரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றுள்ளது.

மகளிர் பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று கெத்துக் காட்டியுள்ளார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஜப்பானின் அகானே யமகுச்சியும் மோதினர்.

முதல் செட்டை சிந்து, 21 – 13 என்று எளிதாக வெற்றி பெற்றார். ஆனால், இரண்டாவது செட்டில் யமகுச்சி சிந்துவுக்கு இணையாக விளையாடி அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில் இரண்டாவது செட்டை யமகுச்சி தான் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் மூலம் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் யார் வெற்றியாளர்கள் என்று நிர்ணயிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் சிந்து, தன் முழுத் திறனையும் வெளிக்காட்டி 22 – 20 என்று இரண்டாவது செட்டையும் கைப்பற்றி வெற்றிவாகை சூடினார். இதன் மூலம் அவர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!