ஷிகர் தவானின் அதிராடியால் டில்லிடம் வீழ்ந்தது பஞ்சாப்

மும்பையில் நேற்று நடந்த 11வது லீக் போட்டியில் ஷிகர் தவானின் அதிரடியால் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றப் பெற்றது டெல்லி அணி,

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. டெல்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக களம் இறங்கினர். இருவரும் டெல்லி பந்து வீச்சை நான்கு திசைகளிலும் விரட்டி, விரட்டி அடித்தனர். பவர்பிளேயில் 59 ரன்கள் அடித்த பஞ்சாப் அணி, 62 பந்தில் 100 ரன்கள் எடுத்தது.

மயங்க் அகர்வால் 36 பந்தில் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 51 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ் கெய்ல் 11 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 9 ரன்னிலும் வெளியேறினர். தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 13 பந்தில் 22 ரன்களும், ஷாருக்கான் 5 பந்தில் 15 ரன்களும் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டிற்கு 195 ரன்கள் எடுத்தது.

196 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். 5 ஓவர்களில் 57 ரன்களை எடுத்தது டெல்லி அணி. 6 வது ஓவரில் 32 ரன்களுக்கு பிரித்வி ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்கினார். தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

இந்த நிலையில் ஸ்மித் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கேப்டன் ரிஷப் பந்த் களம் இறங்கினார். ரிஷப்பந்த் அமைதியாக விளையாட தவான் அதிரடி காட்டினார். இந்த நிலையில் தவான் 49 பந்துகளில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து. சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

கடைசி 4 ஓவர்களில் 36 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஷமி 17-வது ஓவரை வீசினார். அதில் கிடைத்த ஃப்ரீ ஹிட் வாய்ப்புகளை பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு அனுப்பி மிரட்டினார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். இதுதவிர ஒரு பவுண்டரியும் அதே ஓவரில் அடித்ததார்.

கடைசி 3 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற எளிய நிலை உருவானது. ஆனால், ரிச்சர்ட்ஸன் வீசிய அடுத்த ஓவரில் ரிஷப் பந்த் 15 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். எனினும், அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கிடைத்தது.

இதனால் கடைசி 12 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரின் முதல் பந்தை மெரேடித் நோ பாலாக வீச லலித் யாதவ் பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை ஸ்டாய்னிஸ் மீண்டும் பவுண்டரிக்கு விரட்டி வெற்றி இலக்கை எட்டினார்.

டெல்லி அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்கஸ் ஸ்டோனிஸ் 27 ரன்னுடனும், லலித் யாதவ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 3- லீக் போட்டியில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். பஞ்சாப் சந்தித்த 2-வது தோல்வியாகும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்