பிரப்சிம்ரன் சிங் அதிரடி சதம்! பஞ்சாப் அணி வெற்றி

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர். மிகவும் நிதானமாக தனது ஆட்டத்தை துவங்கிய ஷிகார் தவான், 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ரிலி ரஸ்ஸவ்விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டன் களமிறங்கினார்.
பிரப் சிம்ரன் சிங் கொஞ்சம் ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டினார். 5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்கு பிறகு ஜிதேஷ் சர்மா களமிறங்கினார்.
அடுத்து சாம்கரண் 24 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் 2 ரன்களில் அவுட் ஆக, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி, 167 ரன்கள் எடுத்திருந்தது.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியது.
டேவிட் வார்னர் 27 பந்துகளைச் சந்தித்து 54 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து பில் சால்ட் 21 ரன்களும் மிட்சல் மார்ஷ் 3 ரன்களும் எடுத்தனர். ரிலி ரஸ்ஸவ் 5 ரன்களில் அவுட் ஆக அடுத்து வந்த அக்ஷார் படேல் 1 ரன்னில் சுருண்டார். மணிஷ் பாண்டே ரன் எதுவும் எடுக்காமலும் அமன் கான் மற்றும் பிரவின் துபே தலா 16 ரன்கள் எடுத்து வெளியேறினர். குல்தீப் யாதவ் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். இப்படி 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி ஆட்ட நேர முடிவில் 20 ஓவர்களையும் ஆடி 136 ரன்களே எடுத்தது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu