பாராசின் ஒபன் செஸ்: சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா

chess master praggnanandhaa gets a job in IOC
X

chess master praggnanandhaa- செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா.

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, செர்பியாவில் நடைபெர்ற்ற பாராசின் ஒபன் செஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.

செர்பியாவில் நடைபெற்ற பாராசின் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சாம்பியன் பட்டம் வென்றார்.

இவர் சக இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ் (பல்கேரியா), காசிபெக் நோகர்பெக் (கஜகஸ்தான்), கவுஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் (கஜகஸ்தான்) ஆகியோரை வென்று மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 7 வெற்றி, 2 'டிரா' உள்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்


ரஷியாவின் அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தார்.

இதனிடையே சென்னையில் வரும் 28ம் தேதி தொடங்க உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா 'பி' அணியில் பிரக்ஞானந்தா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story