பவர் பிளே...இந்திய அணியை மிரட்டும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் மிட்செல்

பவர் பிளே...இந்திய அணியை மிரட்டும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் மிட்செல்

இந்திய அணியை மிரட்டும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல்.

பவர் பிளேயில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வீழ்த்துவோம் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் மிட்செல் மிரட்டல் விடுத்துள்ளார்.

அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்கியது. மும்பை, சென்னை, பெங்களூரு, டெல்லி, தர்மசாலா, கொல்கத்தா என பல நகரங்களில் லீக் போட்டிகள் நடைபெற்றது. லீக் போட்டியில் தான் சந்தித்த அனைத்து அணிகளையும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகை சூடியதோடு, கடந்த உலக கோப்பை அரை இறுதி போட்டியில் நம்மை நாக் அவுட் செய்து வெளியேற்றிய நியூசிலாந்தையும் வீழ்த்தி அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைத்தது.

அந்த வகையில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நவம்பர் 19-ம் தேதி தொடக்க விழா நடைபெற்ற அதே நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. முதல் லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவிய அதே ஆஸ்திரேலிய அணி தான் நம்முடன் மோத உள்ளது.

இந்நிலையில் முதல் ஆட்டத்தில் சந்தித்த இந்தியாவை மீண்டும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாகஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உலகக்கோப்பையில் பவர் பிளேஓவர்களில் தாமும் ஹேசல்வுட்டும் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இம்முறை பைனலில் இந்தியா தடுமாற்றத்துவக்கத்தை பெறும் அளவுக்கு அசத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் கூறுகையில் நாங்கள் எப்போதுமே சிறந்த அணியை எதிர்கொள்வதற்காகவே விளையாடுகிறோம்.இத்தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடும் இந்தியாவும் நாங்களும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளோம்.குறிப்பாக தொடரின் முதல் ஆட்டத்தில் அவர்களை எதிர்கொண்ட நாங்கள் கடைசியாகவும் எதிர்கொள்வது இந்த உலகக்கோப்பைக்கு நல்ல முடிவாக இருக்கும்.பவர்பிளே ஓவர்களை எங்களுக்கு சாதகமான வழியில் கொண்டு வர வேண்டும். குறிப்பாக ஜோஸ் மற்றும் நான் இந்தஉலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. எனவே இறுதிப்போட்டியில் பவர் பிளேவில் நன்றாகசெயல்படுவது சிறப்பாக இருக்கும் என்றார்.

Tags

Next Story