Ponniyin Selvan 2 தஞ்சாவூருக்கு ஏன் செல்லவில்லை! பதிலளித்த PS2 படக்குழு!

Ponniyin Selvan 2 தஞ்சாவூருக்கு ஏன் செல்லவில்லை! பதிலளித்த PS2 படக்குழு!
X
முழுக்க முழுக்க சோழர்களைப் பற்றிய படத்தை எடுத்துவிட்டு தஞ்சாவூருக்கு ஏன் செல்ல வில்லை இதற்கான காரணம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு பதிலளித்த கார்த்தி இந்த முறை கண்டிப்பாக செல்ல திட்டமிட்டிருக்கிறோம்.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வரலாற்றுத் திரைப்படமாக உருவான படம் பொன்னியின் செல்வன் 2. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மக்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் 28ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான புரமோசன் பணிகளுக்காக பல்வேறு நகரங்களுக்கும் செல்ல திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

கடந்த ஆண்டு திட்டமிட்டபடி பல்வேறு நகரங்களுக்கு சென்றாலும், தஞ்சாவூருக்கு செல்லவில்லை. அதற்கு காரணம் தஞ்சாவூருக்கு சென்ற எந்த தலைவரும் பதவியில் நீடிக்க மாட்டார்கள் அவர்களுக்கு வெற்றி கிடைக்காது என்பது மூட நம்பிக்கை. பலரும் இதை நம்புகிறார்கள். அதனால்தான் பொன்னியின் செல்வன் படக்குழு அங்கு எந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யவில்லை என பலரும் பேசி வந்தனர். அது குறித்து இன்றைய தினம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப பொன்னியின் செல்வன் படக்குழு பதிலளித்துள்ளது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் உலக அளவில் தமிழர்கள் அதிகம் படித்த புத்தகங்களில் ஒன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. பகவத் கீதை, பைபிள், குரான் போல தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து பலர் படிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த நாவலை திரைப்படமாக எடுக்க பலர் முயற்சித்தும் நடக்காமல் இருந்தது. அதற்கு ஒரு விடிவுகாலம் மணிரத்னம் மூலம் வந்தது. கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் பாகத்தை திரையிலேயே பார்த்தோம். இப்போது பாகம் 2 விரைவில் வர இருக்கிறது. இம்முறையாவது தஞ்சாவூர் போவார்களா ? கடந்த முறை ஏன் தஞ்சாவூருக்கு செல்லவில்லை என கேள்வி எழுப்பினார்கள் செய்தியாளர்கள்.

லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னம் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மொத்தமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் 2வது பாகம் தற்போது வெளியாக தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் 28ம் தேதி இந்த படம் உலகம் முழுக்க திரைக்கு வரவுள்ளது.

முதல் பாகத்தின் பலத்த வரவேற்பு காரணமாக அந்த படத்துக்கு 500 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைத்தது. இதனை இந்த பாகத்துக்கும் எதிர்பார்த்திருக்கிறது படக்குழு. இந்த பாகத்தின் வசூல் கடந்த பாகத்தைவிட நிச்சயமாக அதிகரிக்கும் என்கிறார்கள். அதற்கு ஏற்ப புரமோசன்களையும் அதிவிரைவாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் கமல்ஹாசன் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். படம் வெளியாக சரியாக 2 வாரங்கள் இருப்பதால் புரமோஷன் பணிகள் சூடுபிடித்து வருகின்றன.

பல ஊர்களுக்கும் பயணிக்கும் பொன்னியின் செல்வன் படக்குழு ஏன் தஞ்சாவூருக்கு செல்லவில்லை என்பது குறித்த கேள்வி சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆந்தம் வெளியிடும் நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. இதில் பொன்னியின் செல்வன் படக்குழு சார்பாக பதிலளிக்கப்பட்டது.

முழுக்க முழுக்க சோழர்களைப் பற்றிய படத்தை எடுத்துவிட்டு தஞ்சாவூருக்கு ஏன் செல்ல வில்லை இதற்கான காரணம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு பதிலளித்த கார்த்தி இந்த முறை கண்டிப்பாக செல்ல திட்டமிட்டிருக்கிறோம்.

கடந்தமுறை பயணத்திட்டத்தில் இசை வெளியீடே தஞ்சாவூரில் வைத்துதான் நடைபெற இருந்தது. ஆனால் சில காரணங்களால் சென்னையிலேயே வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இந்த முறை நிச்சயமாக தஞ்சாவூர் செல்கிறோம். அந்த திட்டம் எங்கள் பயண திட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!