/* */

PBKS Vs SRH ஹைதராபாத்துக்கு முதல் வெற்றி!

8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி. ஷிகர் தவானின் போராட்டம் வீணானது.

HIGHLIGHTS

PBKS Vs SRH ஹைதராபாத்துக்கு முதல் வெற்றி!
X

8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி. ஷிகர் தவானின் போராட்டம் வீணானது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதரபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களான பிரப்ஷிம்ரன் சிங் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியே கிளம்பினார். புவனேஷ் குமார் வீசிய ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனது பஞ்சாப் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

அவருக்கு பிறகு ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார் மேட் ஷார்ட். ஹைதராபாத் அணி சார்பில் இரண்டாவது ஓவரை மார்க்கோ ஜேன்சன் வீசினார். எல் பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்த அவரைத் தொடர்ந்து ஜிதேஷ் சர்மா களமிறங்கினார். 4வது ஓவரில் அவரும் அவுட் ஆக, மறுபுறம் ஷிகர் தவான் தனி ஆளாக நின்று போராடிக் கொண்டிருந்தார்.

கைக் கொடுத்த சாம்கரண்

அவருக்கு துணையாக களமிறங்கினார் சாம் கரண். இவர்கள் இருவரும் கொஞ்சம் கூடுதல் பார்ட்னர்ஷிப்பை எடுப்பார்கள் என்று நினைத்தபடியே, 9வது ஓவர் வரை நின்றது இந்த இணை. மயாங்க் மார்கண்டே வீசிய அந்த ஓவரின் 5 வது பந்தில் சாம் கரண் அவுட் ஆக, இந்த இணையும் உடைந்தது.

ஷகந்தர் ராசா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாகர், நாதன் எல்லீஸ் என வருவதும் போவதுமாக இருந்தாலும், மறுபுறம் நிலையாக நின்று தனி ஆளாக பஞ்சாப் அணிக்கு ரன் சேர்த்தார் ஷிகர் தவான்.

ஒற்றை படைவீரன்

ஆட்ட நேர முடிவில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 143 ரன்கள் எடுத்திருந்தது. இதில் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற 10 பேரும் சேர்ந்து 44 ரன்கள் எடுத்திருந்தனர். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தவான் மற்றும் மோகித் ரதீ சாதனை ஒன்றை படைத்திருந்தனர். கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு இருவரும் சேர்ந்து 55 ரன்கள் அடித்திருக்கிறார்கள்.

ஹைதராபாத் அணி சார்பில் மயாங்க் மார்கண்டே 4 விக்கெட்டுகளையும் மார்க்கோ ஜான்சன், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பஞ்சாப் பேட்டிங்

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வந்த ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்களாக ஹேரி ப்ரூக், மயாங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.

அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் ஹேரி ப்ரூக் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 3 பவுண்டரிகளும் அடங்கும்.

மயாங்க் அகர்வால் 21 ரன்கள் எடுத்திருந்த போது ராகுல் சாஹர் பந்து வீச்சில் சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரும் தனது பங்குக்கு 3 பவுண்டரிகளை அடித்திருந்தார்.

இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, ராகுல் திரிபாதியும் எய்டன் மார்க்ரமும் சேர்ந்து அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்து ச் சென்று கொண்டிருந்தனர்.

48 ரன்களில் 74 ரன்கள் எடுத்திருந்த ராகுல் திரிபாதியும் 21 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த மார்த்ரமும் களத்தில் இருந்தனர். 18வது ஓவரில் 145 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி.

Updated On: 11 April 2023 4:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  2. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  3. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  4. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  5. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  6. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  7. வீடியோ
    🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு |"தனி...
  8. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  9. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  10. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...