PBKS vs LSG லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் செய்வதாக முடிவெடுத்தது. ஆனால் அதுவே அவர்களுக்கு பாதகமாக அமைந்தது. முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்தது.
258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் கே எல் ராகுல் ககிசோ ரபாடா பந்து வீச்சில் அவுட் ஆனார். 9 பந்துகளைச் சந்தித்த அவர் 12 ரன்களில் ஷாருக் கையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து கைல் மேயர்ஸுடன் ஆயுஷ் பதோனி களமிறங்கினார். இருவரும் பஞ்சாப் அணியை வெளுத்து வாங்கினர். கைல் மேயர்ஸிடமிருந்து 4 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளையும் அடித்தார். மறுபுறம் பதோனி தலா 3 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் எடுத்தார். அடுத்து வந்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியாக ஆடி அசத்தினார்.
5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 72 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் மட்டும் நின்றிருந்தால் ரன்கள் 300 ஐ எட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை அப்படி ஒரு ஆட்டம் ஆடினார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரனும் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
இப்படி வருவபரும் போவபரும் அடி வெளுக்க 20 ஓவர்களுக்கு 257 ரன்கள் எடுத்திருந்தனர் லக்னோ அணியினர். கேப்டன் கே எல் ராகுல் அடிக்கவில்லை என்றால் மற்ற பேட்ஸ்மென்கள் வெளுத்து வாங்குகின்றனர்.
பஞ்சாப் அணியின் கேப்டனும் 1 ரன்னில் அவுட் ஆனார். ப்ரப்சிம்ரன் சிங் 13 பந்துகளைச் சந்தித்து 9 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த அதர்வா 36 பந்துகளில் 66 ரனக்ளும் ராஸா 22 பந்துகளில் 36 ரன்களும் எடுத்திருந்தனர்.
லியாம் 14 பந்துகளில் 23 ரன்களும், சாம் கரண் 11 பந்துகளில் 21 ரன்களும், ஜிதேஷ் 10 பந்துகலில் 24 ரன்களும் எடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக, கடைசியில் 19.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu