ஒன்டே கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 116 ரன்களில் சுருட்டியது இந்தியா

ஒன்டே கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 116 ரன்களில் சுருட்டியது இந்தியா

ஐந்து விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்.

ஒன்டே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 116 ரன்களில் சுருட்டி வீசியது இந்திய அணி.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒன் டே கிரிக்கெட் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணியை 116 ரன்களில் சுருட்டியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவுற்றதை தொடர்ந்து இந்தியாவில் மையம் கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இதில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுள்ளது. மூன்று டி20 மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் என்ற இலக்குடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளது.

இதில் முதல் டி20 போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது. இதன் காரணமாக டி20 போட்டியை பொறுத்தவரை இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் சம நிலையில் உள்ளன.

இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்ஸ் பார்க்கில் இன்று தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகள் இடையேயான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள் தங்களது சுழல் பந்துகளையும் வேகப்பந்துகளையும் வீசினார்கள்.

முதல் ஓவரிலேயே தென் ஆப்பிரிக்கா அணி ஒரு முக்கியமான விக்கெட்டை இழந்தது. அடுத்து 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது விக்கெட் விழுந்து. இந்திய சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் திணறினார்கள். இதன் காரணமாக தென்ஆப்பிரிக்காஅணி 27.3 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டு இருந்த நிலையில் 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். அந்த வகையில் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிதான இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Tags

Next Story