ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி

ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி
X

இந்திய வீராங்கனை, பி.வி.சிந்து

ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி; தைவான் வீராங்கனையிடம் 2-0 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி.

ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி

ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி; தைவான் வீராங்கனையிடம் 2-0 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதியில் தைவான் வீராங்கனை ஸு-யிங்கிடம் தோல்வியடைந்தார் இந்தியாவின் பி.வி.சிந்து.


டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மீராபாய் சானு பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்தார். பாக்ஸிங்கில் இந்திய வீராங்கனை லவ்லினா இந்தியாவிற்கு 2 வது பதக்கத்தை உறுதி செய்துவிட்டார். அவர் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் வென்றால் இந்தியாவிற்கு தங்கம் கிடைக்கும். ஆனால் குறைந்தபட்சம் வெண்கலத்தை உறுதி செய்துவிட்டார் லவ்லினா.

இந்தியாவிற்கு 3 வது பதக்கத்திற்கு நம்பிக்கையளிப்பது பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இஸ்ரேல் வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு நகர்ந்த இந்தியாவின் பி.வி.சிந்து, அடுத்த போட்டியில் ஹாங்காங்கின் சியூங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க்கின் மியா ப்ளிட்ச்ஃபெல்ட்டை 21-15 மற்றும் 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற பி.வி.சிந்து, காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை 21-13 மற்றும் 22-20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் இன்று, டாய் ஸு-யிங் என்ற தைவான் வீராங்கனையை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஆரம்பத்தில் பி.வி.சிந்து அவர் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி முன்னிலையில் இருந்தார். ஆனால் பிரேக்கிற்கு பிறகு அருமையாக ஆடி முன்னிலை வகித்த ஸு-யிங் முதல் செட்டை 21-18 என வென்றார். 2 வது செட்டையும் 21-11 என வென்றார் ஸு-யிங். 18-21 மற்றும் 11-21 என அரையிறுதியில் தோல்வியடைந்த பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பி.வி.சிந்து, சீனாவின் ஹீ பிங் ஜியோவை எதிர்கொள்கிறார். அந்த போட்டியில் வெற்றி பெற்றால் சிந்து வெண்கலம் வெல்லலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!