ஒலிம்பிக்கில் பி.வி சிந்துவுக்கு வெண்கலம்: இந்தியாவுக்கு 2வது பதக்கம்

ஒலிம்பிக்கில் பி.வி சிந்துவுக்கு வெண்கலம்:  இந்தியாவுக்கு 2வது பதக்கம்
X

பி.வி. சிந்து (மாதிரி படம்)

டோக்கியோ ஒலிம்பிக் இறகு பந்து போட்டியில் பி.வி. சிந்து வெண்கல பதக்கத்தை வென்றார். இரண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெயரைப் பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சீனாவின் பிங் ஜியாவோ இடையே முசாஷினோ ஃபாரஸ்ட் பிளாசா கோர்ட் 1 இல் போட்டி நடைபெற்றது..

பிவி சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட்கணக்கில் பிங் ஜியாவோவை வீழ்த்தி, சிந்து வெண்டகல பதக்கத்தை வென்றார். இதன் மூலம் டோக்கியோவில் புதிய வரலாறு படைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை சிந்து பெற்றார்..

இந்தியாவிற்கு இதுவரை கிடைத்த இரண்டு பதக்கங்களையும் வீராங்கனைகளே பெற்றுள்ளனர். என்பது குறிப்பிட தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!