ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்ட பந்தயம்; இத்தாலி வீரர் தங்கம் வென்று சாதனை

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்ட பந்தயம்; இத்தாலி வீரர் தங்கம் வென்று சாதனை
X

டோக்கியோ ஒலிம்பிக்கில் நூறு மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இத்தாலி வீரர்.

டோக்கியோ ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில். இத்தாலி வீரர் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்று சாதனை புரிந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் உலகின் அதிகவேக ஓட்டப்பந்தய வீரர் யார் என்பதை முடிவு செய்யும் போட்டிதான், 100 மீட்டர் போட்டி, இந்த போட்டியை பார்ப்பதை அதிகமானோர் விரும்புவர். 100 மீட்டரை 10 வினாடிக்குள் வீரர்கள் கடந்து விடுவர்.

100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இதுவரை அமெரிக்க கண்டத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த இத்தாலி வீரர் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.


100 மீட்டர் இறுதி போட்டியில் 8 வீரர்கள் கலந்து கொள்வார்கள். பவுல் ஸ்டார்ட், அதாவது துப்பாக்கி வெடிக்கும் முன்னர் ஓடுவது, இந்த தவறால் இங்கிலாந்து வீரர் ஜார்னெல் ஹீயூக்ஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மீதமுள்ள 7 வீரர்கள் மின்னல் வேகத்தில் ஓடினர். அனைவரின் கணிப்புகளுக்கு மாறாக இத்தாலி வீரர் லாமோன்ட் மார்செல் ஜேக்கப்ஸ் 9.80 வினாடிகளில் முதலாவாக வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.



இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

அதிவேக வீரராக உருவெடுத்துள்ள 26 வயதான மார்செல் ஜேக்கப்ஸ் அமெரிக்காவில் பிறந்து இத்தாலிக்கு இடம் பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அமெரிக்காவின் பிரெட் கெர்லி வெள்ளிப் பதக்கமும் (9.84 வினாடி), கனடாவின் ஆந்த்ரே டி கிராஸ் (9.89 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.


உசேன் போல்ட்டின் எதிர்ப்பார்ப்பில் இருந்த அமெரிக்க வீரர் டிரா வோன் புரோமெல் அரை இறுதி சுற்றிலேயே வெளியேறினார்.

இதே போல் முன்னாள் உலக சாம்பியனான ஜமைக்காவின் யோகன் பிளாக்கும் அரை இறுதியுடன் நாட்டை நோக்கி ஓடினார் என்பது குறிப்பி தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!