23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனை

23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனை
X

23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற  ஜோகோவிச்

23 வெறும் நம்பராக இருந்தது.. இன்று நீ சாதித்துவிட்டாய் என பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்கு நடால் வாழ்த்து

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் இதில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றவரும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) நான்காம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.

ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 டென்னிஸ் போட்டிகள் கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்றவையாகும். ரபேல் நடாலும் (ஸ்பெயின்) ஜோகோவிச்சும் இணைந்து அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்களாக இருக்கிறார்கள். இருவரும் தலா 22 பட்டத்தை பெற்று உள்ளனர். காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் இம்முறை பங்கேற்கவில்லை.

பீட் சாம்ராஸின் 14 கிராண்ட்சிலாம் சாதனையை பெடரர் முறியடித்தார். பெடரரின் 20 கிராண்ட்சிலாம் சாதனையை ரபெல் நடால் முறியடித்தார். நடாலின் 22 கிராண்ட்சிலாம் சாதனையை ஜோகோவிச்இன்று முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றார். காயம் காரணமாக நடால் இந்த போட்டியில் ஆடவில்லை. நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் இருந்தார்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.

மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார். 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

இந்நிலையில், ஜோகோவிச்சின் வெற்றிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடால் கூறியதாவது:-

இந்த அற்புதமான சாதனைக்கு ஜோகோவிச்சுக்கு பல வாழ்த்துகள். 23 என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்க முடியாத ஒரு எண், அதை நீங்கள் சாதித்துள்ளீர்கள். இதை உங்கள் குடும்பம் மற்றும் குழுவுடன் கொண்டாடுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோகோவிச் தனது வெற்றி குறித்து பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "23-வது சாம்பியன் பட்டத்தை வென்றது ஒரு நம்பமுடியாத உணர்வு. பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

எனது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல. ஏனென்றால், எனது வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது எனக்கு கடினமான ஒன்றாக இருந்தது. நான் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். எனது வெற்றி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil