விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டனுக்கு 100% அபராதம்.

டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதித்ததுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பலர் மீதும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐபிஎல் 34வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் ஒரே ஒரு பந்து இந்த ஆட்டத்தின் முடிவையே மாற்றி அமைத்தது.
223 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு கடைசி 3 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரோவ்மென் போவெல் முதல் மூன்று பந்துகளில் 3 சிக்ஸர்களை விளாசினார். ஆனால் 3வது பந்து ஃபுல்டாசாக வந்தது. இதற்கு போவெல் நோ பால் கொடுக்குமாறு முறையிட்டும், அம்பயர் நிதின் மேனன் மறுப்பு தெரிவித்துவிட்டார். 3வது நடுவருக்கு கூட முறையிடவில்லை.
இதனால் கடும் ஆத்திரமடைந்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் டக் அவுட்டில் இருந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அணியின் துணை பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே களத்திற்குள் நேரடியாக வந்து அம்பயர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பண்ட் வீரர்களை விளையாடாமல் மீண்டு வருமாறும் கூறினார். இதனால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20-வது ஓவரில் மெக்காய் வீசிய 3-வது பந்து பேட்டர் போவெல் இடுப்பு உயரம் வீசப்பட்டு, கள நடுவர் நோ பால் கொடுக்காததால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே மைதானத்துக்கு வெளியே இருந்த டெல்லி அணியின் கேப்டன் பண்ட் விரக்தி அடைந்து பேட்டர்களை களத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தியது பேச்சு பொருளாகியது.
இந்நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் போட்டி கட்டணத்தில் 100% அபராதமும் டெல்லி அணியின் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம் மற்றும் ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். மேலும் நடுவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu