டென்சிங் நார்கே தேசிய விருதுக்கான விண்ணப்பங்கள்-ஆட்சியர் அழைப்பு

டென்சிங் நார்கே தேசிய விருதுக்கான விண்ணப்பங்கள்-ஆட்சியர் அழைப்பு
X

இந்திய 2020 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..

இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்குப் பெருமை தேடித்தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்திய அரசின் சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய விருதுக்கான(Tenzing Norgey National Adventure Award For The Year 2020) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை https://dbtyas-youth.gov.in என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2020 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய விருதுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 05-07-2021 -க்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-600003 என்ற தலைமை அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் பெற 046-2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும், என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story
ai solutions for small business