பப்ஜி விளையாட்டின் இந்திய பதிப்பு - புதிய சாதனை

பப்ஜி விளையாட்டின் மாற்று பதிப்பான கிராஃப்டன் நிறுவனத்தின் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேம் வெளியாகி மூன்று நாட்களில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட புதிய சாதனை படைத்துள்ளதாம்.
நாட்டில் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் என மூழ்கி கிடந்த விளையாட்டு தான் பப்ஜி. இந்த கேம் சீன நாட்டின் உருவாக்கமாகும். இந்நிலையில் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் சீன நாட்டின் அனைத்து செயலிகளையும் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பப்ஜி கேம் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த அறிவிப்பு இந்திய சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அவர்களை மீண்டும் உற்சாகமடைய செய்யும் வகையில் கிராஃப்டன் நிறுவனம் பப்ஜி கேமினை இந்திய பதிப்பில் உருவாக்க முடிவு செய்தது. அதன்படி பப்ஜி கேமை பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா என்ற பெயரில் இந்திய பதிப்பில் உருவாக்கியது. இந்த தகவல் நாட்டில் உள்ள இளைஞர்களால் வெகுவாக கவரப்பட்டது. இதை அடுத்து பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேம் ( Early Access ) கடந்த ஜூன் 18ம் தேதி அதிகாரபூர்வமாக வெளியானது. முதற்கட்டமாக இந்த கேம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது இந்த கேம் வெளியாகி வெறும் 3 நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில் தற்போது வரை சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை கிராஃப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இதை கொண்டாடும் வகையில் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமை விளையாடும் பயனர்களுக்கு கிரேட் கூப்பன், இரண்டு EXP கார்டுகள், 2x BP கார்டு வழங்கி தனது கொண்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்திய உருவாக்கமான பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேம் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்ய இயலும். மேலும் இந்த கேம் 721 MB அளவை கொண்டது. இந்த கேம் ஆண்ட்ராய்டு 5.1.1 பதிப்புக்கு மேல் கொண்ட பயனர்கள் மற்றும் 2ஜிபிக்கு ரேமிற்கு மேற்கொண்ட மொபைல் பயனர்களுக்கு மட்டுமே செயல்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் ஆப்பிள் பயனர்களுக்கு இந்த கேமின் சேவை வழங்கப்படும் என்றும் கிராஃப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu