பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:  ஜோகோவிச், நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்
X
Sports News பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி 4-வது சுற்றுக்கு ஜோகோவிச், நடால் முன்னேறியுள்ளனர்

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் அல்ஜாஸ் பெடேனை (சுலோவெனியா) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவிச் அடுத்து அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொள்கிறார்.

Sports News, French Open மற்றொரு ஆட்டத்தில் 13 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் ஜான்ட்ஸ்கல்ப்பை (நெதர்லாந்து) தோற்கடித்து 17-வது முறையாக 4-வது சுற்றை எட்டினார். நடால் அடுத்து ஆஜர் அலியாசிம்மை (கனடா) சந்திக்கிறார். அலியாசிம்முக்கு நடாலின் மாமா டோனி பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!