சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா மனைவிக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படும் ஜடேஜா முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளார்
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படும் ஜடேஜா முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஜடேஜா களத்திலேயே அப்படியே விழுந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிஎஸ்கே நடப்பு சீசனில் அதிகபட்ச ஸ்கோராக 216 ரன்கள் எடுத்தது. இதனை துரத்திய ஆர்சிபி முதலில் தடுமாறினாலும், பின்னர் சிஎஸ்கேவுக்கு டென்ஷன் கொடுத்தது. இருப்பினும் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே, முதல் 2 புள்ளிகளை பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 9 வது இடத்துக்கு சிஎஸ்கே முன்னேறியது.
வெற்றிக்கு பிறகு பேசிய ஜடேஜா, இம்முறை நாங்கள் அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டோம். எங்கள் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி ரன் குவித்தனர். குறிப்பாக ராபினும், துபேவும் அபாரமாக விளையாடினர். பந்துவீச்சாளர்களும் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டை எடுத்தனர்.நாங்கள் தொடர்ந்து தோற்றதால் சிஎஸ்கே நிர்வாகம், கேப்டன் என்ற முறையில் தமக்கு எவ்வித அழுத்தத்தையும் தரவில்லை.
ஒரு கேப்டனாக தொடர்ந்து சீனியர்களின் அறிவுரையை கேட்டு வருகிறேன். மஹி பாய் இருக்கிறார். அவரிடம் ஒவ்வொரு போட்டியிலும் கற்று வருகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் என்து திறன் மேம்படும். எங்கள் அணியில் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். தொடர் தோல்வி காரணமாக, நாங்கள் பதற்றம் அடையவில்லை. அமைதியாக இருந்து எங்களுக்கு நாங்களே உறுதுணையாக இருந்தோம் .
கேப்டனாக எனக்கு இது முதல் வெற்றி. இந்த வெற்றியை நான் என் மனைவிக்கு சமர்பிக்கிறேன் என்று ஜடேஜா கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய ராபின் உத்தப்பா, 2 புள்ளிகள் பெற்றது நிம்மதியாக உள்ளது என்று கூறினார். நாங்கள் தோல்வி பிறகு வீரர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து, அதிக நேரத்தை செலவிட்டு, ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்து கொண்டோம். தொடர் போக போக, நாங்கள் ஒரு அணியாக மேம்படுவோம் என்றார்.
95 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்ற சிவம் துபே, அணியின் வெற்றிக்கு எனது பங்கை கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பேட்டிங்கிற்கு தோனி மற்றும் மற்ற சீனியர்கள் தான் அறிவுரைகளை வழங்கினர். எனது ரோல் மாடல் யுவராஜ் தான். அவரை போல் விளையாடுகிறேன் என்று பலரும் சொன்னார்கள். எனது அணி என்னை எந்த இடத்தில் இறக்கினாலும், நான் விளையாட தயாராக இருக்கிறேன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu