வெற்றி பெற்றது மும்பை! ஹீரோவான ரஷீத் கான்! 4 விக்கெட் + 79 ரன்கள்!

டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதனால் முதலில் மும்பை அணியின் துவக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியைத் துவங்கினார்கள். ரோஹித் சர்மா 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில், ரஷித் கான் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்குப் பிறகு அந்த இடத்துக்கு சூர்யகுமார் களமிறங்கினார்.
இஷான் கிஷன் ஒருபுறம் நிதான ஆட்டத்தை ஆட, இந்த பக்கம் சூர்யகுமார் வெளுத்து வாங்கினார். சிக்ஸர்கள் பறந்த நிலையில் சூர்யகுமார் பவுண்டரிகளையும் தெறிக்க விட்டார். இந்நிலையில் இஷான் 31 ரன்களில் அவுட் ஆனார்.
நேஹல் வதேரா அடுத்து களமிறங்கினார். ஆனால் அவரும் ரஷீத் கான் பந்தில் அவுட் ஆகி திரும்பினார். ஒருபுறம் அவுட் ஆகிக் கொண்டே இருக்க மறுபுறம் சூர்யகுமார் சதமடித்தார். 11 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 103 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார் சூர்யா.
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் ரஷீத்கான் 4 விக்கெட்டுகளையும் மோஹித் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்திலேயே சொதப்பியது. சஹா , கில், பாண்ட்யா அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆக, விஜய் சங்கர் 29 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 41 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் ரஷீத் கான் அதிரடி காண்பித்தார்.
15 ஓவர்களில் ஆல் அவுட் ஆகிவிடும் என நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் ரஷீத் கான் நின்று ருத்ரதாண்டவமாடினார். கடைசி ஓவர் வரை பல சிக்ஸர்களை பறக்க விட்ட ரஷீத் கான் கடைசியில் 219 ரன் இலக்கை அடைய முடியாவிட்டாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இன்றைய நாளில் அவர் 4 முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமின்றி 32 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இதன்மூலம் குஜராத் அணியின் பலம் மும்பைக்கு தெரியவந்தது.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu