ஹைதராபாத்தை வீழ்த்திய மும்பை! ப்ளே ஆஃப் தகுதி பெறுமா?

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்களாக விவ்ரந்த் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.
விவரந்த் சர்மா ஒரு பக்கமும் மயாங்க் அகர்வால் இன்னொரு பக்கமும் அடித்து ஆட ரன் மள மளவென பெருகியது. 2 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விவ்ரந்த் அவுட் ஆகினார்.
மயாங் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார் ஹென்ரிச் கிளாஸன். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான இவர் சாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்த 2 பவுண்டரிகளுடன் சமாதானம் ஆனார். அதற்குள் மயாங்க் அகர்வாலின் விக்கெட்டை இழந்தது ஹைதராபாத் அணி.
4 சிக்ஸர்களையும் 8 பவுண்டரிகளையும் அடித்த மயாங்க் 6 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு களமிறங்கிய மார்க்ரம், ஹேரி ப்ரூக், சன்விர் சிங் என பெரிய ஸ்கோரை யாரும் எடுக்காத நிலையில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து சரியாக 200 ரன்களை குவித்தது.
இதன்பிறகு 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஹைதராபாத்தை வீழ்த்தியது.
மும்பை அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா, இஷான் கிஷன் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் ரோஹித் சர்மா 37 பந்துகளில் அரைசதம் அடித்து அவுட் ஆனார்.
கேமரூன் கிரீன் 47 பந்துகளில் 100 ரன்களுடனும், சூர்யகுமார் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியை ருசித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu