ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : மும்பை அணி சாதனை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : மும்பை  அணி சாதனை
X
முதல் தர கிரிக்கெட்டில் உத்தரகாண்ட் அணியை 725 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மும்பை அணி சாதனை படைத்தது

வியாழன் அன்று நடந்த ரஞ்சி டிராபி 2022 காலிறுதியில் மும்பை உத்தரகாண்ட் அணியை 725 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்து மீண்டும் 'டிக்ளேர்' செய்தது. 795 ரன்கள் என்ற மிக இமாலய இலக்குடன் களமிறங்கிய உத்தரகாண்ட் அணி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

இந்த வெற்றியின் மூலம் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் 1929-30 சீசனில் குயின்ஸ்லாந்திற்கு எதிராக நியூ சவுத் வேல்ஸ் அணி 685 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஞ்சிக் கோப்பையில் பெங்கால் அணிதான் அதிக ரன் குவித்தது. 1953-54ல் ஒரிசாவை 540 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil