ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க்

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்ட  மிட்செல் ஸ்டார்க்
X

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தொகையாக ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஏலம் தொடங்கிய உடன் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் பவுலை 7 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளது.

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ரூ. 4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்டை ரூ. 6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் ரூ. 6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி அவரை தட்டி தூக்கியது.

இலங்கை வீரரான வனிந்து ஹசரங்காவை ரூ. 1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை ரூ. 1.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

இந்திய ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வீரராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஸ்மத்துல்லா ஓமர்சாயை ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.

தென் ஆப்பிரிக்க வீரரான ஜெரால்டு கோட்ஸியை ரூ. 5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

இந்திய பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலை ரூ. 11.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியது. நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செலை ரூ. 14 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது.

இங்கிலாந்து வீரரான கிறிஸ் வோக்சை ரூ. 4.20 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியது.தென் ஆப்பிரிக்க வீரரான ஸ்டப்ஸ் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திற்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.

இந்திய வீரரான கே.எஸ்.பரத் ரூ. 50 லட்சத்திற்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியாவை ரூ. 50 லட்சத்திற்கு கொல்கத்தா அணி ஏலத்தில் வாங்கியது.

பெங்களூரு அணி முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளரான அல்சாரி ஜோசப்பை ரூ. 11.50 கோடிக்கு வாங்கியது.

இந்திய வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவை ரூ. 5.80 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான பேட் கம்மின்சை ஏலத்தில் எடுக்க பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அவரை ரூ. 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் வாங்கியது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவின. இறுதியில் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தொகையாக ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.

இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவியை ரூ. 6.40 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது.

கருண் நாயர், ஸ்டீவ் சுமித், மணிஷ் பாண்டே ஆகிய வீரர்களை முதல் சுற்றில் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!