ஐபிஎல் 2022: டெல்லியை வீழ்த்தியது மும்பை அணி

ஐபிஎல் 2022: டெல்லியை வீழ்த்தியது மும்பை அணி
X
டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.

மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி டில்லி அணியை ஆட பணித்தது.

முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 7 விக்கட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக பவல் 34 பந்துகளின் நான்கு சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் குவித்தார். ரிஷப் பந்த், 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சில் பும்ரா 25 ரன்கள் கொடுத்து 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து ஆடத்துவங்கிய மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா மிகவும் சொதப்பலாக ஆடி 13 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார், தொடக்க ஆட்டக்காரர் இசான் கிஷன் 35 பந்துகளின் 48 ரன்கள் எடுத்தார்,

ப்ரித்வி ஷா 11 பந்துகளில் 4 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது


டெல்லி அணி இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் பெங்களுரு அணி பிளே ஆப் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது

Tags

Next Story
கோபி பாரியூரில் குண்டம் திருவிழா..! பக்தர்களின் உற்சாக பார்வையில் கடவுளின் அருளுடன்..!